Raayan: “அந்த விஷயத்தில் ‘ராயன்’ தனுஷ் அப்படியே கமல் சார் மாதிரி”: காளிதாஸ் ஜெயராம் ஓபன்
சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் ஆகியோரது போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், ராயன் படம் குறித்தும் தனுஷ் பற்றியும் காளிதாஸ் ஜெயராம் மனம் திறந்துள்ளார்.
தனுஷ் அப்படியே கமல் சார் மாதிரி
பவர் பாண்டியை தொடர்ந்து ராயன் படம் மூலம் மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் தனுஷ். தனது 50வது படமான ராயன்-ஐ தனுஷே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனையடுத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ராயன் டைட்டில் அறிவிப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கடந்த 19ம் தேதி படக்குழு வெளியிட்டது. அதில் தனுஷுடன் காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோரும் மிரட்டலாக போஸ் கொடுத்திருந்தனர். ராயன் வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனை ராயன் டைட்டில் போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் கேரக்டர் ரஜினியின் பாட்ஷா போல தரமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ராயன் டைட்டில் போஸ்டரை தொடர்ந்து எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் ஆகியோரது போஸ்டர்களும் கடந்த இரு தினங்களாக வெளியாகின. இந்நிலையில் ராயன் படம் குறித்தும் தனுஷ் பற்றியும் காளிதாஸ் ஜெயராம் பேசியது வைரலாகி வருகிறது. மலையாள நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ், தமிழில் விக்ரம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தில் கமல்ஹாசனின் மகன் கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு தமிழில் ராயன் மிக முக்கியமான கம்பேக் கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அவரும் ராயன் படம் பற்றி அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது ராயன் படத்தில் தனுஷுடன் நடித்தது கனவு நிஜமானதை போல இருந்தது. தியேட்டரில் தனுஷ் சார் படங்களை அப்படி ரசிச்சு என்ஜாய் செய்துள்ளேன். அவரோட நடிப்புல இருந்து எல்லாமும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றுள்ளார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் கமல் சாரை எப்படி பார்க்கிறேனோ அப்படித்தான் தனுஷையும் பார்ப்பதாக காளிதாஸ் ஜெயராம் கூறியுள்ளார். தனுஷ் வெறும் நடிகர் மட்டும் கிடையாது, சூப்பரான இயக்குநர், நல்ல சினிமா மேக்கிங் தெரிந்தவர்... அப்படிப்பட்டவருடன் அவரது இயக்கத்தில் நடித்ததில் மகிழ்ச்சி தான். தனுஷ் சார் ஃபேன்ஸுக்கு ராயன் ஒரு தரமான சம்பவமாக இருக்கும் எனவும் காளிதாஸ் ஜெயராம் ஹைப் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











