Raayan: நீ அடிடி செல்லம்! 5 நாளில் யூடியூபில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்த வாட்டர் பாக்கெட் சாங்

சென்னை: நடிகர் தனுஷின் ராயன் படம் நாளுக்கு நாள் பல சாதனைகளைப் படைத்து வருகின்றது. அதாவது ராயன் படம் வசூலில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் படத்தின் திரைக்கதைப் புத்தகம் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வானது. ராயன் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்தார்.

அதேபோல் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, ஓ ராயா பாடலை தனுஷ் மற்றும் ஏ.ஆர் ரகுமான் பாடி வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ராயன் படத்தில் இடம் பெற்றுள்ள வாட்டர் பாக்கெட் பாடல் யூட்டூபில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Raayan Dhanush Water Packet Song

தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது என பலர் கூறினர். படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியது.

Raayan Dhanush Water Packet Song

வாட்டர் பாக்கெட்: இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் இந்தப் படத்தில், மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டாவது பாடல் வாட்டர் பாக்கெட் பாடல். அந்த பாடல் லிரிக் வீடியோவாக ரிலீஸ் ஆனபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வாட்டர் பாக்கெட் பாடலின் வீடியோ சாங் கடந்த 5ஆம் தேதி யூட்டூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது.

Raayan Dhanush Water Packet Song

ஒரு கோடி: இந்த பாடல் யூட்டூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டதில் இருந்தே யூட்டூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் பாடல் வெளியாகி இன்றுடன் 6 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில், பாடல் இதுவரை யூட்டூபில் ஒரு கோடியே 12 லட்சங்களுக்கும் மேல் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

Raayan Dhanush Water Packet Song

பாடியவர்கள்: இந்தப் பாடலை, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இந்தப் பாடலை கானா காதர் எழுதியுள்ளார். இந்த பாடல் படத்தின் முதற்பாதியில் வருகின்றது. இந்தப் பாடலை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் திரையரங்கிலேயே ஆட்டம் போட்டு கொண்டாடினர். இந்நிலையில் பாடல் வெளியாகி 5 நாட்களில் ஒருகோடியே 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தது படகுழுவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X