Raayan: போடு வெடிய.. ஆஸ்காரில் நுழைந்த ராயன்.. இயக்குநராக காலரை தூக்கிவிடும் தனுஷ்!
சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால் நிரம்பி இருக்கும் பல ஹாலிவுட் படங்களைப் போல் இருக்கின்றது என பலர் கூறினர். படம் முழுவதும் கொலை, வெட்டு, குத்து என இருப்பதால் படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியது.
ஹாலிவுட் படம்: படத்தின் முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சி ஆகியவை ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்துள்ளது. அதேபோல், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து மிரளவைத்துள்ளார் தனுஷ். இதுமட்டும் இல்லாமல், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயும் இரவிலேயுமே காட்சி படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு ஹாலிவுட் படம் பார்த்த எண்ணத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என பல விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

வசூல் விபரம்: படம் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் ஏழு நாட்கள் ஆகின்றது. படத்தின் முதல் ஆறு நாட்கள் வசூல் விபரம் குறித்து பார்க்கலாம். முதல் நாளில் படம் அனைத்து மொழிகளிலும் இந்தியாவில், ரூபாய் 13.65 கோடிகளும், இரண்டாம் நாளில் ரூபாய் 13.75 கோடிகளும் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியானது. அதேபோல் மூன்றாவது நாளில் ரூபாய் 15.25 கோடிகளும் வசூல் செய்தது. வார நாட்களில் படத்தின் வசூல் குறைந்தது. நேற்றுடன் படம் ரிலீஸ் ஆகி 7 நாட்கள் அதாவது ஒரு வாரம் ஆகியுள்ளது. இதுவரை படம் சுமார் ரூபாய் 60 கோடி வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

குவியும் வாழ்த்து: தனுஷ் நடிகராக தனது 50வது படத்தை தானே இயக்கி தானே நடித்துள்ளார். இதனால் திரைத்துறையினர் பலரும் தனுஷ்க்கு வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர். படம் ரிலீஸ் ஆன தினத்தில் நடிகர் சூர்யா, கார்த்தி, இயக்குநர் இமயம் பாரதிராஜா , இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தினர். அதன் பின்னர் நடிகர் மகேஷ் பாபு , இயக்குநர் பா. ரஞ்சித், ராகவா லாரன்ஸ், லோகேஷ் கனகராஜ் , இளன் உள்ளிட்ட இயக்குநர்களும் வாழ்த்தினர்.

ஆஸ்காரில் திரைக்கதை: இந்நிலையில் படத்தின் திரைக்கதை புத்தகத்தினை ஆஸ்கர் விருதினை வழக்கும் அகாடமி நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வாகியுள்ளது. இந்த தகவலை ராயன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தனுஷ் மற்றும் ராயன் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலர் ஒரு இயக்குநராக தனுஷ்க்கு இது மாபெரும் பெருமை என பலரும் தனுஷை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











