வாட்டர் பாக்கெட் மூஞ்சி.. பெரிய பாய் சம்பவத்தை கொஞ்சம் பாருங்களேன்.. ராயன் பாட்டு ராக்கிங்!
சென்னை: தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் இடம்பெற்றுள்ள ”வாட்டர் பாக்கெட்” பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. அதன் க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி ரசிகர்களை மெய்மறக்க செய்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள “வாட்டர் பாக்கெட் மூஞ்சி” பாடல் கேட்டவுடனே ரசிகர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. தர லோக்கலாக தரமான ஒரு பாடலை ஏ.ஆர். ரஹ்மான் தனுஷ் படத்துக்காக போட்டிருக்கிறார்.

ஆயுத எழுத்து படத்தில் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மினுக்கு “ சண்டக்கோழி” பாடலை போட்டது போல தற்போது சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஜோடிக்கான பாடலாக இந்த ”வாட்டர் பாக்கெட்” பாடல் உருவாகியுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் vs அனிருத்: ஷங்கர் படத்துக்கு அனிருத்தும் தனுஷ் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானும் இசையமைத்துள்ள மேஜிக் இந்த ஆண்டு நடைபெற்றுள்ளது. இந்தியன் 2 படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டைலில் அனிருத் பாடல் இசையமைத்துள்ளார். அனிருத் ரேஞ்சுக்கு ராயன் படத்திற்காக பெரிய பாய் பெரிய சம்பவத்தை செய்துள்ளார்.
வாட்டர் பாக்கெட் மூஞ்சி: வாட்டர் பாக்கெட் தற்போது விற்பனை செய்யப்படவில்லை என்றாலும் ஒரு காலத்தில் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அந்த வாட்டர் பாக்கெட்டை பலரும் பயன்படுத்தினர். அதனை லிரிக்கில் கொண்டு வந்து செம காதல் கானா பாடலை ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் குரலில் உருவாகி உள்ள இந்த பாடல் நிச்சயம் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என தெரிகிறது. வடசென்னை படத்தில் இடம்பெற்ற “கோயிந்தம்மா” பாடல் சாயல் லேசாக எட்டிப் பார்த்தாலும் இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை நொடிப் பொழுதில் கவர்ந்து விடும். இன்று மாலை முழு பாடல் வெளியாகிறது.
அபர்ணாவையே அலேக்காக தூக்கி: கேப்டன் மில்லர் படத்திலும் சந்தீப் கிஷன் நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷுடன் டிராவல் செய்து வரும் அவருக்கு ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை தனுஷ் கொடுத்துள்ளார். தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் ராயன் படத்தில் நடித்து வருகின்றனர். அபர்ணா பாலமுரளி கிருஷ்ணனை அலேக்காக தூக்கிக் கொண்டு இந்த பாடலில் சந்தீப் கிஷன் நடந்து செல்வதை பார்த்தாலே ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்து விடுவார்கள். அந்தளவுக்கு இருவருக்குமான கெமிஸ்ட்ரியை தனுஷ் வொர்க்கவுட் செய்திருக்கிறார். அடுத்த மாதம் ஜூன் 13ம் தேதி வெளியாகவுள்ள ராயன் திரைப்படம் கேப்டன் மில்லர் படத்தை விட மிகப்பெரிய வெற்றிப் படமாக தனுஷுக்கு மாறுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications