Raayan: மாஸ்ஸாக வெளியான ராயன் போஸ்டர்... தனுஷுக்கு நன்றி சொன்ன SJ சூர்யா... சம்மர் ட்ரீட் ரெடி!

சென்னை: தனுஷின் 50வது படமான ராயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதனைத் தொடர்ந்து எஸ்ஜே சூர்யாவின் போஸ்டரையும் நேற்று படக்குழு வெளியிட்டது. செம்ம மாஸ்ஸாக வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.

தனுஷுக்கு நன்றி சொன்ன எஸ்ஜே சூர்யா
தனுஷின் 50வது படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியானது. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை அவரே இயக்கியுள்ளார். அதேபோல் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, நித்யா மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசை என பிரம்மாண்டமான கூட்டணியில் உருவாகியுள்ளது ராயன்.

 Raayan: SJ Suryah thanked Dhanush for give a opportunity in Raayan

பவர் பாண்டிக்குப் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படமாக ராயன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை செல்வராகவன் எழுதியதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அவரோ ராயன் எனது கதை அல்லது, அது தனுஷின் ட்ரீம் ப்ராஜெக்ட் எனக் கூறிவிட்டார். வடசென்னையை பின்னணியாக வைத்து கேங்ஸ்டர் ஜானரில் ராயன் படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் ராயன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் மூவரும் மிரட்டலாக போஸ் கொடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்ஜே சூர்யாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று மாலை வெளியான எஸ்ஜே சூர்யாவின் போஸ்டரும் ரசிகர்களுக்கு அதிக ஹைப் கொடுத்துள்ளது.

நாற்காலி ஒன்றில் கையில் டீ டம்ளருடன் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்துள்ளார் எஸ்ஜே சூர்யா. சும்மாவே வில்லன் கேரக்டர்களில் வெளுத்து வாங்கும் எஸ்ஜே சூர்யா, ராயன் படத்தில் இன்னும் தரமாகவே சம்பவம் செய்துள்ளாராம். நிச்சயமாக இந்தப் படம் எஸ்ஜே சூர்யா கேரியரில் முக்கியமானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ராயன் படத்தில் இருந்து வெளியான தனது போஸ்டரை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள எஸ்ஜே சூர்யா, தனுஷுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். "தனுஷ் சார் உங்கள் டைரக்‌ஷனில் நடித்ததில் மகிழ்ச்சி.... இப்படியொரு வாய்ப்பு கொடுத்ததற்கும் மிக்க நன்றி. ராயன் திரைப்படம் நிச்சயமாக இண்டர்நேஷனல் தரத்தில் இருக்கும், சம்மர் ட்ரீட் ரெடி.." என ட்வீட் செய்துள்ளார். இதன்மூலம் ராயன் சம்மரில் வெளியாகும் என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X