பில்டப் எல்லாம் நல்லாதான் இருக்கு.. புதுசா எதுவுமே இல்லையே?.. ராயன் டிரெய்லர் எப்படி இருக்கு?
சென்னை: கேப்டன் மில்லர் டிரெய்லரில் இருந்த அளவுக்கு கூட வெரைட்டியான காட்சிகள் ராயன் படத்தின் டிரெய்லர் மிஸ்ஸிங் என்றே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். புதுப்பேட்டை படத்திலேயே தனுஷின் கேங்ஸ்டர் அவதாரத்தை பார்த்து விட்ட ரசிகர்கள் வடசென்னை, அசுரன் என அவர் கத்தியை எடுத்து பலரை போட்டுத் தள்ளும் காட்சிகளையும் பார்த்து விட்டனர்.
காடுன்னு இருந்தா அதில் சிங்கம், புலி, யானை, நரி இருக்கும் போன்ற வசனங்களை விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் கேட்டு விட்டோம். இந்நிலையில், அதே போன்ற துவக்கத்துடன் தான் தனுஷின் 50வது படமான ராயன் படத்தின் டிரெய்லரும் வெளியாகி இருக்கிறது.

முதல் ஷாட்டிலேயே யாரையோ கொலை செய்து விட்டு ரத்தக்கறையுடன் அமர்ந்திருக்கும் ராயன் தனுஷுக்கு தண்ணீர் ஊற்றி அவரது தங்கை துஷாரா விஜயன் கழுவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ராயன் டிரெய்லர் எப்படி இருக்கு?: செல்வராகவன் சிறு வயதில் இருந்தே ராயனுக்கு அடைக்கலம் கொடுத்து ஆலோசனை தரும் நபராக உள்ளார் என தெரிகிறது. ராயனுக்கு எதிரியாக எஸ்.ஜே. சூர்யா இன்னொரு கேங்ஸ்டராக உள்ள நிலையில், இருவருக்கும் இடையே என்ன பஞ்சாயத்து ஏற்படுகிறது, என்ன பிரச்சனை வெடிக்கிறது. எதனால், இருவரும் மோதிக் கொள்கின்றனர் என்கிற எதையுமே டிரெய்லரில் ரிவீல் செய்யவில்லை.
மூன்று சகோதரர்கள்: ராயன் தனுஷுக்கு வலது கரமாகவும் இடது கரமாகவும் அவரது தம்பிகளான காளிதாஸ் ஜெயராம் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளனர். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல எத்தனை பேர் வந்தாலும், பேய் மாதிரி சென்று ராயன் தாக்குவார் என தெரிகிறது. வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட நடிகைகள் டிரெய்லரில் மிஸ்ஸிங்.

எஸ்.ஜே. சூர்யா அதிரடி: மார்க் ஆண்டனி படத்தில் ஃபங் வைத்துக் கொண்டிருந்த தோற்றத்தில் கொஞ்சம் ஆல்டர் பண்ண மாதிரியான கெட்டப்பில் எஸ்.ஜே. சூர்யா மிரட்டுகிறார். ஆனால், அவர் பேசும் வசனத்தை எடிட் செய்து ட்ரோல் செய்யவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேக்கிங்காக பார்த்தால் ராவான கேங்ஸ்டர் படத்தை தனுஷ் இயக்கியுள்ளார் என தெரிகிறது. ஆனால், கதையாக பார்த்தால் பெரிதாக எதுவும் தெரியவில்லை. காட்சிகளிலும் புதுமை எங்கேயும் தென்படவில்லை. படம் வெளியான பின்னர், வலுவான கதை இருந்தால் நிச்சயம் ராயன் படம் தனுஷுக்கும் தமிழ் சினிமாவுக்கும் கை கொடுக்கும்.
ஏ.ஆர். ரஹ்மான் சம்பவம்: மொத்த டிரெய்லரிலேயே கடைசியாக வரும் அந்த ஏ.ஆர். ரஹ்மானின் "உசுரே நீதானே நீதானே" பாடல் தான் ரசிகர்களை ரொம்பவே எமோஷனலாக கனெக்ட் செய்கிறது. இந்தியன் 2 படத்தில் மிஸ்ஸான ஏ.ஆர். ரஹ்மான் இசைக்காவே ரசிகர்கள் ராயன் படத்தை பார்ப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











