காரில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் அஜித்.. மகளுடன் வாஞ்சையாக சைக்கிள் ஓட்டுறாரே.. க்யூட்!

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது துபாயில் நடைபெற்று வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகின்றார். இதற்காக தனது பெயரில் தனி அணியை உருவாக்கி, அதற்காக கடந்த ஆண்டில் தீவிர பயிற்சி மேற்கொண்டார். இதற்கிடையில் அவர் ஒப்புக் கொண்ட இரண்டு படங்களிலும் தனது பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு ரேஸில் முழு மூச்சாக இறங்கியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அஜித்குமார் தனது மகளுடன் ஜாலியாக சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் விடாமுயற்சி. இந்தப் படத்தினை இந்த மாதம் 23ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இது இவரது நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றார்கள். இரண்டு படங்களின் மீதும் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

ajithkumar ajithkumar unseen pictures ajithkumar racing

தற்போது கார் ரேஸில் கலந்து கொண்டு ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்துக்கு கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் ஆகியவை சிறுவயதில் இருந்தே அவருக்கு மிகவும் விருப்பமான விளையாட்டுகள். இவர் சினிமாவிற்கு வந்திருந்தாலும் தனது ஆசைகளை அவர் நிறைவேற்றுவதில் தயக்கமே காட்டியது கிடையாது. தான் திட்டமிட்டுவிட்டால் அதனை சிறப்பாக செய்து காட்டிவிடுவார் அஜித்.

அஜித் மகள் அனோஷ்கா: அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது, நடிகை ஷாலினியுடன் இணைந்து பணியாற்றினார். அதன் பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2000ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு இவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. இவர்களின் முதல் குழந்தையான அனோஷ்கா, நடிகர் அஜித்தை உரித்து வைத்ததைப்போல் இருப்பார். சமீபத்தில் கூட அனோஷ்காவின் 17வது பிறந்த நாளை அஜித், ஷாலினி மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொண்டாடினர்.

சைக்கிள்: அஜித் பேட்டி ஒன்றில் தான் கலந்து கொண்ட கார் ரேஸில் அதிகபட்சமாக 290 முதல் 300 கிலோமீட்டர் வேகத்தில் காரினை இயக்கியுள்ளதாக தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இப்படியான நிலையில் அஜித் தற்போது துபாயில் கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார். இப்படியான நிலையில், அவர் தனது மகள் அனோஷ்கா சிறுவயதில் இருக்கும்போது அவருடன் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள், இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அவர்களுடன் ஷாலினியும் உள்ளார்.

வாஞ்சை: அதாவது இந்தப் புகைப்படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் நாங்கள் எப்படி இந்தப் புகைப்படங்களைத் தவறவிட்டோம் என கேட்டு வருகின்றனர். மேலும் சில ரசிகர்கள், கார் ரேஸில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் அஜித்குமார் மகள் அனோஷ்காவுடன் வாஞ்சையாக சைக்கிள் ஓட்டுறாரே எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X