»   »  ஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars

ஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars

Posted By:
Subscribe to Oneindia Tamil
90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் எத்தனையோ பேர் பேசியிருந்தாலும் நடிகை ரேச்சல் ஷான்டனின் பேச்சு தான் உலக சினிமா ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது.

90வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் தி ஷேப் ஆஃப் வாட்டர் படம் அதிகபட்சமாக நான்கு விருதுகளை பெற்றது.

கிறிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் படத்திற்கு 3 விருதுகள் கிடைத்தது.

ஆஸ்கர்

ஆஸ்கர்

ரேச்சல் ஷான்டன் எழுதி நடித்த தி சைலன்ட் சைல்ட் படத்திற்கு சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த குறும்படத்தை ரேச்சலின் வருங்கால கணவர் கிறிஸ் ஓவர்டன் இயக்கினார்.

காது கேளாமை

காது கேளாமை

காது கேட்க முடியாத நான்கு வயது சிறுமியை பற்றிய குறும்படம் தான் தி சைலன்ட் சைல்ட். அந்த படத்தில் நடித்த சிறுமி மெய்சி ஸ்லை(6) நிஜமாகவே காது கேட்கும் திறன் இல்லாதவர்.

ரேச்சல்

ரேச்சல்

விருதை பெற மேடைக்கு வந்த ரேச்சல் மற்றும் கிறிஸ் ஓவர்டன் மெய்சிக்கு நன்றி தெரிவித்தனர். விருதை பெற்றுக் கொண்ட பிறகு ரேச்சல் ஆங்கிலம் மற்றும் சைகை பாஷையில் நன்றி தெரிவித்தார்.

வைரல்

ரேச்சல் காது கேட்க முடியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சைகையில் பேசியது உலக ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ஆஸ்கர் விழாவில் எத்தனை பேர் பேசியிருந்தாலும் ரேச்சலின் பேசிய வீடியோ தான் வைரலாகியுள்ளது.

English summary
The Silent Child actress Rachel Shenton Oscar acceptance speech has impressed the audience and fans all over the world as she used sign language for the differently abled.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil