Rachita Mahalakshmi : சொகுசு கார் வாங்கிய ரச்சித்தா... விலை எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரச்சித்தா விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரச்சித்தா மகாலட்சுமி.
இந்த சீரியல் மூலம் கிடைத்த வரவேற்பை அடுத்து பல சீரியல்களில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தார்.

நடிகை ரச்சித்தா : டஸ்கி கலர்...ஆர்ப்பாட்டம் இல்லாத சாந்தமான முகம்... உதட்டிற்கு மேலே இருக்கும் அழகான மச்சம் என்று ரச்சித்தாவை வர்ணித்துக்கொண்டே போகலாம். அனைவரின் பேவரைட் நடிகையான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் கடலில் மூழ்கடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் : அனைவருக்கும் பிடித்த ரச்சித்தாவை ராபர்ட் மாஸ்டருக்கும் பிடித்து போக, காதலின் தீபம் ஒன்று என காதல் கீதம் பாடி அவரின் பின்னாலே சுற்றிக் கொண்டே வந்தார். ராபர்ட் மாஸ்டர் எங்கே இருந்தாலும் ரச்சித்தா மீது ஒரு கண் வைத்து க்யூட்டா சைட் அடித்துக்கொண்டே இருந்தார். ராபர்ட் மாஸ்டரின் அலப்பறை தாங்க முடியலடா சாமி என சொல்லும் அளவுக்கு இருந்தது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி : பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ரச்சித்தா, ராபர்ட் மாஸ்டர் நானும் நல்ல நண்பர் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தோழியான ஷிவின் கணேசனுடன் தற்போது வரை நட்பாக பழகி வருகிறார். இவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி, இணை பிரியாத தோழியாக உள்ளனர்.
புதிய ஆண்டு.. புதிய தொடக்கம் : இந்நிலையில், நடிகை ரச்சிதா எம்ஜி ஹெக்டர் என்ற சொகுசு காரை புதிதாக வாங்கி உள்ளார். சிகப்பு நிறம் கொண்ட அந்த காரின் விலை ரூ.22 லட்சம் ரூபாயாம். புது கார் வாங்கிய போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து புதிய ஆண்டு... புதிய தொடக்கம் என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் ரச்சித்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











