கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி.. ரீமேக் ஆகிறது 'கோலமாவு கோகிலா..' நயன்தாரா ஆகும் பிரபல நடிகை!

By

சென்னை: நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது.

நயன்தாரா, யோகி பாபு, சரண்யா, ஆர்.எஸ்.சிவாஜி, நான் கடவுள் ராஜேந்திரன் உட்பட பலர் நடித்த படம், கோலமாவு கோகிலா.

டார்க் ஹியூமர் வகை படமான இதை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார்.

போதைப்பொருள்

போதைப்பொருள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 2018- ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நயன்தாராவின் நடிப்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறார் நயன்தாரா. அவர் தாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.

கல்யாண வயசுதான்

கல்யாண வயசுதான்

பலரிடம் உதவி கேட்டும் பணம் கிடைக்காமல் போக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி.. என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. நயன்தாராவை ஒருதலையாகக் காதலிக்கும் யோகிபாபு பாடுவது போல இந்த பாடல் அமைக்கப் பட்டிருந்தது.

நடிகை ரச்சிதா ராம்

நடிகை ரச்சிதா ராம்

இந்தப் படம் இப்போது கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. மயூரா ராகவேந்திரா என்பவர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். கன்னடத்துக்காக கதையில் சின்ன சின்ன மாற்றங்களை செய்ய இருக்கிறார்களாம். பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா ராம், நயன்தாரா நடித்த கேரக்டரில் கோகிலா கேரக்டரில் நடிக்க உள்ளார். மயூராவுக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன்பு, 'கன்னட் கொத்திலா' என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ரீமேக் உரிமை

ரீமேக் உரிமை

படம் பற்றி அவர் கூறும்போது, இது ஆரம்பகட்டம்தான். இப்போதுதான் பேசிவருகிறோம். லைகாவிடம் ரீமேக் உரிமையை கேட்டு வருகிறோம். ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். நடிகர், நடிகைகள், மற்ற விவரங்களை அப்போது முழுமையாகத் தெரிவிக்கிறோம் என்றார். இதில் ஹீரோயினாக நடிக்க இருக்கும் ரச்சிதா, வீரம், லல்லி, ஏப்ரல் மற்றும் டாலி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X