மாயன் முகத்தில் தடவ.. மகா மூக்கில் வச்சு விட.. கோலாகல கொண்டாட்டம்.. ஹேப்பி பர்த்டே ரச்சிதா!
சென்னை : சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் மஹா கதாபாத்திரத்தில் ரச்சிதா நடித்து வருகிறார்.

திறமையானவர்
பெங்களூரை சேர்ந்தவர் நடிகை ரச்சிதா, தினேஷ் கோபாலசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவரும் இணைந்து பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்து இருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளும் பேசக்கூடிய திறமையானவர்.

மீனாட்சியாக
இவர்,பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில், ஜோதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலபமானர். பின்னர், சன் தொலைக்காட்சியில் இளவரசி என்ற சீரியலிலும் நடித்து பிரபலம் அடைந்தார். இருப்பினும் , அவர் அனைவருக்கும் தெறிந்த முகமாக மாறியது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

2 சீரியலில் பிஸியாக
அந்த சீரியலில் நடித்தன் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் அழுத்தமாக பதித்துவிட்டர் ரட்சிதா. இவர் தொலைக்காட்சி தொடர்களில் மட்டும் இல்லாமல் ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3.0 ஆகிய நிகழ்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

குட்டி கொண்டாட்டம்
சமீபத்தில் தனது பிறந்த நாளை படக்குழுவினரோடு கேக் வெட்டி கொண்டாடிய ரச்சிதா, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலம், நாம் இருவர் நமக்கு இருவர் ஷூட்டிங்கில் குட்டி கொண்டாட்டம். மேலும், குறிப்பு என பதிவிட்டு குறைகளை மறந்துவிட்டு, வீடியோவை மட்டும் என்ஜாய் பன்னுங்க. உங்களின் எல்லை இல்லா அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











