பிரிந்த பின்பும் ரச்சித்தாவை மறக்காத கணவர்..என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் நிகழ்ச்சியில் நுழைந்துள்ள ரச்சிதா மகாலட்சுமிக்கு அவரின் கணவர் தினேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதனைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரில் நடித்தார்.

சரவணன் மீனாட்சி தொடரின் 2ஆம் பாகத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். பிறகு, விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி பெயருக்கு ஏற்றபடி மகாலட்சுமி போல மிகவும் லட்சணமாக இருப்பார். டஸ்கி நிறமாக இருந்தாலு இவரின் அழகுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. கர்நாடகத்தைச் சேர்ந்த ரச்சிதா இன்று தமிழ் நாட்டு இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாகவே மாறிவிட்டார். ட்விட்டர்,இன்ஸ்டாகிராம், பேஸ் புக் போன்ற சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.

கணவனை பிரிந்தார்

கணவனை பிரிந்தார்

பிரிவோம் சந்திப்போம் சீரியல் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் ரச்சிதா சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். தினேஷூம் ரச்சிதாவும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியாபுரம் என்ற சீரியலில் நடித்தனர்.ஆனால் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்த்து வருகின்றனர்.

கலந்து கொள்ள காரணம் இதுதான்

கலந்து கொள்ள காரணம் இதுதான்

தற்போது ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6ல் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட ரச்சிதா மகாலட்சுமி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம் எனக்குள் தேடல் ஒன்று இருந்தது. என்னை நானே புரிந்துக் கொள்வதற்கு பிக்பாஸ் வீடு நல்ல வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். என்னை பற்றி இணையத்தில் வரும் கமெண்டுகளை வைத்துதான் நான் சரியான பாதையில் செல்கிறேனா என பாடம் கற்கிறேன் என கூறியிருந்தார்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்

வெற்றி பெற வாழ்த்துக்கள்

இந்நிலையில், ரச்சிதாவின் கணவர் தினேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரச்சிதாவின் போட்டோவை பகிர்ந்து, பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் பலரின் இதயங்களை வென்று வர வாழ்த்துக்கள் என கூறியுள்ளார். என்னதான் இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் ரச்சிதா வெற்றிபெற முதல் ஆளாக வாழ்த்து கூறிய தினேசை ரசிகர்கள் பாராட்டிய வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X