Bigg Boss Tamil 7: குடும்ப பிரச்சனையில குளிர் காயுறதே பிக் பாஸுக்கு வேலையா போச்சு.. இவர் வராரா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 2வில் பாலாஜியையும் அவரது மனைவி நித்யாவையுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே விட்டு டிஆர்பியை ஏற்றிக் கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அவர்களது குடும்ப பிரச்சனை மேலும், தான் பெரிதானதே தவிர சரியாகவே இல்லை.
இந்நிலையில், கடந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஒரு சின்னத்திரை நடிகையின் கணவரை பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக களமிறக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதுமட்டுமின்றி மேலும், பல சர்ச்சையான போட்டியாளர்களையே இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வலை வீசி தேடிக் கொண்டு வரப்போகின்றனர் என்கிற கூடுதல் தகவல்களும் போட்டியாளர்களின் சில அடிபடும் பெயர்களும் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் சீசன் 7: பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் இந்த முறை செப்டம்பர் இறுதியிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டிங்கில் கமல்ஹாசன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன. இந்நிலையில், சில போட்டியாளர்களின் பெயர்களும் அடிபட்டு வருகின்றன.
ஒரு பக்கம் இந்தியன் 2, கல்கி 2898 ஏடி, எச். வினோத் படம், மணிரத்னம் படம் என கை வசம் 4 பெரிய படங்களுடன் கமல் பிசியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் பிசியாக இருந்தாலும், தனக்கு ரொம்பவே பிடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விடாமல் அடுத்த சீசனையும் அவரே நடத்தும் முடிவில் உறுதியாக உள்ளதாக கூறுகின்றனர்.
ரச்சிதா கணவர்: பிக் பாஸ் சீசன் 6ல் பிக் பாஸ் நிகழ்ச்சியையே கரைத்துக் குடித்து விட்டு போட்டியாளராக களமிறங்கிய ரச்சிதா பிக் பாஸில் பெரிதாக பொங்கி எழுவார், வனிதா, அர்ச்சனா போல மாறுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசி வரை அமைதியாக இருந்து எதற்காக இவரை அழைத்து வந்தோம் என பிக் பாஸ் டீமே மண்டையை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு விளையாடி விட்டு சென்று விட்டார்.

இந்நிலையில், இந்த சீசனில் அவரது கணவர் தினேஷை போட்டியாளராக களமிறக்கப் போவதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
குடும்ப பிரச்சனையில் குதூகலம்: ரச்சிதாவும் அவரது கணவர் தினேஷும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் தினேஷ் வந்தால், மீண்டும் ரச்சிதா பற்றிய பேச்சுக்களும், சில சர்ச்சைகளும் வெடிக்கும் என்பதால் அவரை உள்ளே கொண்டு வர பிக் பாஸ் குழு திட்டமிட்டுள்ளதாகவும் தினேஷும் பிக் பாஸுக்கு வர ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது.
தினேஷை தவிர்த்து ரேகா நாயர், பப்லு, விஜய் டிவி ஜாக்குலின் உள்ளிட்ட போட்டியாளர்களும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள் என்கிற கெஸ்ஸிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications