பர்சனல் விஷயத்தை இங்கே பேசாதீங்க.. அசல் கேட்ட கேள்வியால் டென்ஷனான ரச்சிதா !
சென்னை : நடிகை ரச்சிதா மகாலட்சுமியிடம் கணவர் குறித்து அசல் கோலார் கேட்ட கேள்வியால் அவர் டென்ஷனானார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை இந்த முறையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். தினமும் இரவு 9.30 இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும், பிக் பாஸ் நேயர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

அனைவருக்கும் யூனிபாஃர்ம்
கடந்த வாரம் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமே அசத்தலாக இருந்தது. அந்த வார டாஸ்கில் கிச்சன், வெஸல் வாஷிங்,பாத்ரூம் கிளினிங், கிளினிங் டீம் என 4 டீமுக்கும் விதவிதமாக டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால், ஒவ்வொரு டீமுக்கும் சிவப்பு, மஞ்சள்,பச்சை, நீலம் என யூனிபாஃர்ம் கொடுக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் விதவிதமான உடைகளை அணியாமல் இருந்தனர்.

டென்ஷன் ஆன ரச்சிதா
இந்த டாஸ்க் வியாழக்கிழமையோடு முடிந்ததை அடுத்து, ஹவுஸ்மெட்டுகள் தங்களுக்கு பிடித்த உடையை அணிந்து வந்தனர். இதில், ரச்சிதா புடவையில் தேவதைப்போல வந்தார். அவரை பார்த்த அசல், உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? உங்களுக்கு கல்யாணம் ஆகவில்லை என நினைத்தேன் என்று கூறினார். அப்போது ரச்சிதா அவரை செல்லமாக அடித்தார். தொடர்ந்து உங்கள் கணவர் என்ன செய்கிறார் என கேட்டார். இதனால், ரச்சிதா என்ன சொல்வது என்று தெரியாமல் டென்ஷன் ஆனார். அப்போது குறுக்கிட்ட விஜே மகேஸ்வரி, கணவர் பற்றியெல்லாம் கேட்காதே.. அது அவருடைய பர்சனல் என்றார்.

அவங்க மேல கிரஷ்ஷா?
ரச்சிதா புடவையில் பார்த்த ராபர்ட் மாஸ்டர், அழகாக இருக்கிறாரே என்பது போல் பார்த்தார். அப்போது, ஆயிஷா, உங்களுக்கு அவங்க மேல கிரஷ் தானே என்று கேட்க ராபர்ட் மாஸ்டரோ, அப்படி எல்லாம் இல்லை பிடிக்கும் அவ்வளவுதான். நான் பொதுவாக சீரியலே பார்க்க மாட்டேன். சீரியலில் அவர் நடித்ததை பார்த்தவுடன் பிடித்தது என்றார். உடனே இதுக்கு பேருதான் சார் க்ரஷ் என ராபர்ட் மாஸ்டரை கிண்டலடித்தார்.

ரச்சிதாவிடம் வழிந்தார்
முன்னதாக இந்த வீட்டில் யாரை நண்பர்களாக்கிக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற டாஸ்கில், ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை நட்பாக்கிக் கொள்ள விரும்புவதாகவும், நான் சீரியலே பார்க்க மாட்டேன். ஆனால், நீங்கள் நடித்த சீரியலை பார்த்தேன் என்று கூறினார்.இதையடுத்து,ரச்சிதா இந்த வீட்டில் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதை பார்த்து நட்பாக பழகலாம் என்றார்.


Click it and Unblock the Notifications











