சட்டை பட்டனை கழட்டி நச்சுனு போஸ் கொடுத்த ரச்சிதா.. மேடம் ஒரு முடிவுலத்தான் இருக்காங்க போல!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலாட்சுமி, தற்போது ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலாஜி முருகதாசுடன் இவர் நடித்த பயர் திரைப்படம் பிப்ரவரி 14ந் தேதி வெளியாக உள்ளது. இப்படி அடுத்தடுத்து படத்தில் பிஸியான நடித்து வரும் இன்ஸ்டாகிராமில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கன்னட சீரியல் ஒன்றின் மூலமாக நடிகையாக மாறினார். இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பின் சன் தொலைக்காட்சியில் இளவரசி தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் அடுத்தடுத்து சீரியலில் நடித்த போதும் இவருக்கு, இல்லத்தரசிகளிடம் இருந்து போதுமான பாராட்டு கிடைக்கவில்லை.

ரச்சித்தா மகாலட்சுமி: மீண்டும் விஜய் டிவிக்கு வந்த ரச்சித்தா, சரவணன் மீனாட்சி சீசன் 1 தொடரின் வெற்றியை அடுத்து, சரவணன் மீனாட்சி சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் ரச்சிதா, தங்க மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து அனைவரின் மனதிலும் தனி இடம் பிடித்தார். இதில் கவின் சரவணப்பெருமாள் வேடத்தில் நடித்திருப்பார். இவர்கள் இருவரின் காதல் மிகவும் ரசிக்கும் படி இருந்ததால், இந்த சீரியலுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இதைத்தொடர்ந்து, உப்புக் கருவாடு என்ற படத்தில் நடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்: ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு எடுபடாததால் மீண்டும் சின்னத்திரைக்கு வந்த ரச்சித்தா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்தார். ஆனால், அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின் நான், ரச்சித்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது, ரச்சித்தா தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஒரு முடிவேடு இருக்கும் ரச்சிதா: நடிகை ரச்சித்தா நடித்த எக்ஸ்டீம் மற்றும் தள்ளி மனசு என்ற தெலுங்கு திரைப்படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. இதையடுத்து, பிப்ரவரி 14ந் தேதி இவர் நடித்த பயர் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பாடல் ஒன்று கடந்த வாரம் வெளியாகி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. அந்த பாடலில் படுக்கை அறை காட்சியில் அத்துமீறி நடித்து இருக்கிறார் என பலர் அவரை திட்டி வரும் நிலையில், நடிகை ரச்சித்தா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு நச்சு போஸ் கொடுத்து இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ரச்சித்தா மேடம் ஒரு முடிவுலத்தான் இருக்காங்க போல என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











