பிரபல சேனலை நேரடியாக தாக்கிய ரச்சிதா.. என்னதான் பிரச்சினை?
சென்னை : சரவணன் மீனாட்சி என்ற தொடரின் லீட் கேரக்டரில் நடத்து அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ரச்சிதா.
இந்தத் தொடரை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வந்த அவர் அந்தத் தொடரிலிருந்து விலகினார்.
தொடர்ந்து இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் சாதனா என்ற கேரக்டரில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்தத் தொடரில் அவரது கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சரவணன் மீனாட்சி தொடர்
சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மீனாட்சியாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றவர் ரச்சிதா. அவரது இந்தக் கேரக்டர் மற்றும் நாயகன் -நாயகிக்கான கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை மிகவும் சிறப்பாக பேசப்பட்டது. இந்தத் தொடர் பல எபிசோட்களை கடந்து டிஆர்பியிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இது சொல்ல மறந்த கதை தொடர்
இந்தத் தொடரை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் நடித்து வந்த ரச்சிதா, அந்தத் தொடரிலிருந்து திடீரென விலகினார். இதையடுத்து பிரபல சேனலில் இது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் லீட் கதாபாத்திரத்தில் கமிட்டானார். இந்தத் தொடரில் சாதனா என்ற கேரக்டரில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

சாதனா கேரக்டர்
தொடரில் கணவனை இழந்து நீதிக்காக போராடும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரச்சிதா மகாலட்சுமி. இவருக்கு உதவி செய்யும் நாயகனாக சத்யா தொடர் புகழ் விஷ்ணு நடித்து வருகிறார். கடந்த மார்ச் மாதத்தில்தான் இந்த தொடர் துவங்கியது. இந்நிலையில் விரைவில் சீரியல் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரச்சிதா ஆதங்கம்
இந்நிலையில் இதுகுறித்த தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரச்சிதா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சொல்ல மறந்த கதை சாதனாவின் கேரக்டர் இப்படி முடிவடையும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் நல்ல கருத்துள்ள சீரியலை முடித்ததற்கு சானலுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

நேரடி குற்றச்சாட்டு
சானலிடமிருந்து இதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இனிமேலாவது சானலின் ஃபேக் பிரமோஷனில் இருந்து ஃபிரீயாக இருக்கலாம் என்றும் அவர் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். சீரியலை ஜஸ்ட் லைக் தட்டாக சேனல் முடித்ததற்கு வெட்கப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். தான் சாதனா கேரக்டரை மிகவும் மிஸ் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணுவுடன் பிரச்சினையா?
சேனல் இந்த சீரியலை முடித்ததாகவும் ஆனால் தன்மீது குற்றச்சாட்டு எழும்படி நடந்துக் கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். ஆனால் இந்தத் தொடர் இவ்வளவு சீக்கிரமாக முடிக்கப்பட்டதற்கு ரச்சிதா மற்றும் நாயகன் விஷ்ணு இடையிலான பிரச்சினைகளே காரணம் என்றும் ஒரு தரப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











