Rachitha - பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆன கணவர்.. எமோஷனல் பதிவு போட்ட ரச்சிதா.. ஓஹோ கதை அப்படி போகுதோ

சென்னை: Rachitha Mahalakshmi(ரச்சிதா மகாலட்சுமி) பிக்பாஸ் வீட்டுக்குள் தனது கணவர் தினேஷ் என்ட்ரி ஆகியதை அடுத்து ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனல் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரச்சிதா கன்னட சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அங்கு அவரது அழகுக்கும், நடிப்புக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் ரச்சிதா. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய திரை கலைஞர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ அதேபோல் சின்னத்திரை நடிகர், நடிகைகளையும் கொண்டாடுவது வழக்கம். அதனை பயன்படுத்தி பலர் வளந்திருப்பதும் இங்கு நடந்திருக்கிறது.

Rachitha Put Emotional Post in Her instagram Page

தமிழில் ரச்சிதா: அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலின் மூலம் அறிமுகமான ரச்சிதாவுக்கும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக தன்னுடைய கலரை மாற்றிக்கொண்டு நடித்தது பலரின் அப்ளாஸை அள்ளியது. அந்த சீரியல் ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதன்படி அதே சேனலில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வில் நடித்தார். அந்த சீரியல் ரச்சிதாவுக்கு மேலும் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது.

திருமணம்: இந்த சூழலில் பிரிவோம் சந்திப்போம் தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துகொண்டிருந்த சூழலில் திடீரென இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. கடந்த பல மாதங்களாக இரண்டு பேரும் பிரிந்தே வாழ்ந்து வருகிறார்கள்.

பிக்பாஸ் 6: நிலைமை இப்படி இருக்க பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் ரச்சிதா. அதில் தனது திறமையை பயன்படுத்தி விளையாண்ட அவர் சில வாரங்கள் தாக்குப்பிடித்தார். அவர் வீட்டுக்குள் இருந்தபோது அவரிடம் ராபர்ட் மாஸ்டர் பேசிய விஷயங்கள் அனைத்துமே ட்ரெண்டாகின. மேலும் அவர்களை வைத்து பல மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டனர்.

பிக்பாஸ் 7: இந்நிலையில் ரச்சிதாவின் கணவர் தினேஷ் தற்போது பிக்பாஸ் ஏழாவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் கலந்துகொண்டிருக்கிறார். அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதை அடுத்து ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தி ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் தனது தந்தையின் புகைப்படத்துக்கு முன்பு தன் தாயின் கையை பிடித்துக்கொண்டு நிற்கிறார். மேலும் அதற்கு, எனக்கு நீ உனக்கு நான் என்று கேப்ஷனும் போட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இனி தன்னுடைய வாழ்க்கையில் தினேஷுக்கு இடம் இல்லை என்பதைத்தான் இதன் மூலம் ரச்சிதா மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X