அசிங்கமான சூப்பர் ஸ்டாரா ரஜினி?... பாலிவுட் நடிகருக்கு எதிராக கொந்தளிக்கும் ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குறித்து பாலிவுட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர் - நடிகர் கமால் ரஷீத் கான் கூறியுள்ள கருத்துக்களால் ரஜினி ரசிகர்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
ஏற்கனவே தனது முட்டாள்தனமான பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகளால் பலரது வெறுப்புகளை சம்பாதித்தவர் இந்த கமால் என்பது நினைவிருக்கலாம்.
கமால் ரஷீத் கான் கூறியுள்ள கருத்து இனவெறி பிடித்த கருத்தாகும் என்று கமாலின் டிவி்ட்டர் பக்கத்தில் உண்டு இல்லை என்று கருத்துக்களைக் குவித்து வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

யார் இந்த கமால்...
இவர் தேஷ்துரோஹி என்ற இந்திப் படத்தைத் தயாரித்தவர். ஆனால் இந்தப் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் என்று கூறி படத்தை மகாராஷ்டிர அரசு தடை செய்து விட்டது. இவருக்கு வயது 38தான் ஆகிறது.

உ.பி காரர்
உ.பியைச் சேர்ந்தவர் கமால். டிவியில்தான் இவர் முதல் முதலில் அறிமுகமானார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்.

ஷமீதா ஷெட்டி மீது பாட்டிலை வீசியவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரது கலாட்டாக்களுக்கு அளவே இல்லை. ஒருமுறை ரோஹித் ஷெட்டி என்பவர் மீது பாட்டிலை தூக்கி அடித்தார். ஆனால் அது குறி தவறி பக்கத்தில் இருந்த நடிகை ஷமீதா ஷெட்டி மீது பட்டு அவர் துடித்தார்.

ராவோடு ராவாக வெளியேற்றம்
இவரது அக்கப் போர் தாங்காமல் ராவோடு ராவாக வெளியேற்றி விட்டனர்.

ரஜினி குறித்து அசிங்கமான கருத்து
இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் இந்த கமால் கான். இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து அசிங்கமான முறையில் கருத்து தெரிவித்துள்ளார் இந்த கலாட்டாக்காரர்.

அசிங்கமான சூப்பர் ஸ்டாராம்
தனது டிவி்ட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் சார் சூப்பரான சூப்பர் ஸ்டாரா இல்லை இருப்பதிலேயே மோசமான சூப்பர் ஸ்டாரா என்று எனக்கு கருத்து தெரிவியுங்கள் என்று திமிர்த்தனமாக எழுதியுள்ளார் கமால்.

பிரித்து மேயும் ரஜினி ரசிகர்கள்
இந்தக் கருத்து ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. மொழி, மாநில பேதம் இல்லாமல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் கமாலின் டிவிட்டர் பக்கத்தை உண்டு, இல்லை என்று செய்து வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications











