Radha Ravi Vs Vishal: விஷாலுடன் பிரச்சனை இருந்தும் அயோக்யா படத்தில் நடித்தது ஏன்?: ராதாரவி

By Siva

Recommended Video

பிரச்சனை வேறு தொழில் வேறு- தெளிவாக உள்ள ராதாரவி,விஷால்-வீடியோ

சென்னை: விஷாலின் அயோக்யா படத்தில் நடிப்பது குறித்து ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார்.

விஷால், ராஷி கன்னா உள்ளிட்டோரை வைத்து வெங்கட் மோகன் இயக்கி வரும் அயோக்யா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடித்துள்ளார்.

நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், ராதாரவியும் எலியும், பூனையுமாக மோதிக் கொண்டதை யாராலும் மறக்க முடியாது.

விஷால்

விஷால்

விஷால் படத்தில் ராதாரவியா, அப்படி என்றால் ராசியாகிவிட்டார்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒரு அருமையான பதில் அளித்துள்ளார் ராதாரவி. விஷாலுடன் சேர்ந்து நடித்தது வசதியாகவும்,(?) நல்ல அனுபவமாகவும் இருந்தது என்கிறார் அவர்.

சங்கம்

சங்கம்

நடிகர் சங்கம் வேறு, நடிப்பு தொழில் வேறு. இரண்டையும் குழப்பக் கூடாது. படப்பிடிப்பு தளத்தில் நானும், விஷாலும் ஜாலியாக பேசி மகிழ்ந்தோம். அவர் அன்பாக நடந்து கொண்டார். நடிப்பு என் தொழில் என்பதால் இந்த படத்தில் நடித்தேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.

அயோக்யா

அயோக்யா

அயோக்யா படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது, நீங்கள் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தெரிவித்தார். அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால் நடித்தேன் என்று ராதாராவி கூறியுள்ளார்.

சமரசம்

சமரசம்

நான் நடித்தால் விஷாலுக்கு ஒத்து வருமா என்றெல்லாம் நான் கேட்கவில்லை. படத்தில் நடிக்க அழைத்தார்கள், நடித்தேன் என்கிறார் ராதாரவி. பிரச்சனை வேறு தொழில் வேறு என்பதில் விஷாலும், ராதாரவியும் தெளிவாக உள்ளனர். அதனால் சேர்ந்து நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X