காமெடி நடிகர் பற்றி ராதாரவி சர்ச்சை பேச்சு… இணையத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு !

சென்னை : மூத்த நடிகர் ராதாரவி, காமெடி நடிகர் குறித்து பேசியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மனதில் பட்டதை சட்டென பேசும் ராதாரவி, சமீபத்தில் நயன்தாரா குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.

அந்த வகையில், இவர் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஏராளமான படங்கள்

ஏராளமான படங்கள்

வலிமை, அரண்மனை3, சைத்தான்கே பச்சா, சதுரங்கவேட்டை 2, டாக்டர், அயலான்,சுந்தரா டிராவல்ஸ், காசேதான் கடவுளடா என கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு.

லொள்ளு சபா

லொள்ளு சபா

யோகி பாபு ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில், உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இதில் சிறுசிறு காட்சிகளிலும் நடித்திருக்கிறார். இதையடுத்து, அமீர் நாயகனாக நடித்த யோகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதில் ஒரு சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் யோகிபாபுவுக்கு நல்ல தொடக்கமாக அமைந்தது.

முக்கிய ரோலில்

முக்கிய ரோலில்

இதையடுத்து, பையா, கலகலப்பு, அட்டக்கத்தி, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, யாமிருக்க பயமே, ஐ எனப் பல படங்களில் ஒருசில நகைச்சுவைக் காட்சிகளில் வந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். மணிகண்டன் இயக்கிய ஆண்டவன் கட்டளை படத்தில் நாயகன் விஜய் சேதுபதியின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் தன்னால் நகைச்சுவையைத் தாண்டி நடிப்பிலும் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்று நிரூபித்தார்

கோலமாவு கோகிலா

கோலமாவு கோகிலா

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவைக் காதலிப்பவராக நடித்து செம அட்ராசிட்டி செய்து இருப்பார். மேலும், எனக்கு கல்யாண வயசுதான் பாடல் யோகி பாபுவை மேலும் பிரபலமாக்கியது. ரஜினகாந்த், அஜித், விஜய்,சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சிறந்த காமெடி நடிகர்

சிறந்த காமெடி நடிகர்

நகைச்சுவை மட்டும் அல்ல குணசித்திர கதாபாத்திரத்திலும் என்னால் கனகச்சிதமாக நடிக்க முடியும் என்பதை கோமாளி திரைப்படத்தில் நிரூபித்து இருப்பார். அப்படத்தில், நகைச்சுவை, சென்டிமென்ட் என அனைத்து வகையான நடிப்பிலும் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றார். இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றார். மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி பாபு எனக்கு மூளை சோறு போடவில்லை முடிதான் சோறு போட்டது என்று கலகலப்பாக கூறியிருந்தார்.

ராதா ரவி சர்ச்சை பேச்சு

ராதா ரவி சர்ச்சை பேச்சு

இந்நிகழ்ச்சியில் பேசிய மூத்த நடிகர் ராதா ரவி, இப்போ கூட ஒரு தம்பி வந்துச்சி, அவர் முடிய வளர்த்து இருக்கிறார். மயிருக்கு இருக்கும் மரியாதை கூட நடிகனுக்கு இல்லை எனக் கூறினார். மேலும் யோகி பாபு போல் முடி வளர்ப்பது நடிப்பது இன்றைய காலகட்டத்தில் நடக்காதது அதற்காகவும் பாடுபட வேண்டும் எனக் கூறினார். மேலும் இன்றைய காலகட்டத்தில் தனக்கு சிறந்த கதாபாத்திரங்கள் கிடைப்பதாகவும் கூறினார்.

தமிழக மக்களின் நெஞ்சில்

மேலும், பேசிய ராதா ரவி, எனக்கு உயிர் கொடுத்த தந்தை எம் ஆர் ராதா அவர்களுக்கும் பூமிக்கு என்னை அறிமுகப்படுத்திய தனலட்சுமி அம்மையாருக்கும் ,மேலும் இன்று வரை படத்தில் நடிப்பதற்கு காரணம் தமிழக மக்களின் நெஞ்சில் இடம் கொடுத்ததால் எனக்கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த ஆண்டு வந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X