நயன்தாராவை கீழ்த்தரமாக விமர்சித்த ராதாரவி: தங்கச்சி ராதிகா என்ன செய்தார் தெரியுமா?
Recommended Video

சென்னை: நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசிய அண்ணன் ராதாரவியிடம் ராதிகா சரத்குமார் என்ன சொன்னார் என்று தெரிய வந்துள்ளது.
கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி அந்த படத்தின் ஹீரோயினான நயன்தாராவை பற்றி ரொம்ப கேவலமாக பேசினார்.
அவர் அப்படி பேசினாலும் யாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மாட்டார்கள், நயன்தாராவை ஆதரிக்கவும் மாட்டார்கள் என்றார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
ராதிகா
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த ராதிகா சரத்குமார் ட்வீட் செய்திருப்பதாவது, மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கும் கலைஞர்களில் நயன்தாராவும் ஒருவர். அவருடன் சேர்ந்து வேலை பாத்துள்ளேன். முழு வீடியோவை பார்க்கவில்லை. ஆனால் இன்று ரவியை சந்தித்து இது நன்றாக இல்லை என்றேன் என்றார். இது தான் உங்க கண்டிப்பா ராதிகா?
வலிக்காம அடி
ராதிகாவின் ட்வீட்டை பார்த்தவர்கள் அடிக்கணும் ஆனால் வலிக்கக் கூடாது என்பது போன்று உள்ளது உங்களின் ட்வீட். இதுக்கு நீங்க உங்க அண்ணனிடம் எதுவும் சொல்லாமலேயே இருந்திருக்கலாம் என்கிறார்கள்.
பாராட்டு
நயன்தாரா விவகாரம் பற்றி தெரிந்தும் நடிகர்கள் யாரும் வாய் திறக்காத நிலையில் ராதிகா தனது அண்ணனை அட்லீஸ்ட் லைட்டா கண்டித்திருக்கிறாரே என்று சிலர் அவரை பாராட்டியுள்ளனர்.
விமர்சனம்
ராதாரவி இப்படி கேவமலாகவும், கீழ்த்தரமாகவும் பேசியது இது ஒன்றும் முதல் முறை அல்ல. அவர் தொடர்ந்து இப்படித் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











