ராதாரவி எந்த தைரியத்தில் நயன்தாராவை அசிங்கப்படுத்தினார் தெரியுமா?
Recommended Video

சென்னை: ராதாரவி கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாராவை எந்த தைரியத்தில் அசிங்கமாக விமர்சித்தார் தெரியுமா?
நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி லேடி சூப்பர் ஸ்டாரை பற்றியே கீழ்த்தரமாக பேசினார். அதை கேட்டு அங்கிருந்தவர்களும் கைதட்டி சிரித்தார்கள்.

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையை இந்த ராதாரவி இப்படி விளாசியுள்ளாரே என்று பலரும் கொந்தளித்தனர். திரையுலகை சேர்ந்தவர்கள் ராதாரவிக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கமும் அவரை எச்சரித்து கடிதம் அனுப்பியது. படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் இப்படி எல்லாம் தரக்குறைவாக பேசி கவனத்தை ஈர்க்கிறார் ராதாரவி என்று நயன்தாரா விளாசியுள்ளார்.
நயன்தாராவை பற்றி விமர்சித்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்தும் ராதாரவி ஏன் அப்படி செய்தார் என்று நினைக்கலாம். அதற்கு அவர் கொலையுதிர்காலம் மேடையிலேயே பதில் அளித்தார்.
அதாவது தமிழக மக்கள் எதுவாக இருந்தாலும் 4 நாட்களில் மறந்துவிடுவார்கள் என்றார் ராதாரவி. அந்த தைரியத்தில் தான் அவர் நயன்தாராவை பற்றி அப்படி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











