ஸ்ரீரெட்டி, சின்மயியை கலாய்த்த ராதா ரவி: 'மீ டூ' எல்லாம் மந்திரிகளுக்காம்

By Siva

Recommended Video

ஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ

சென்னை: பாலியல் புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி, சின்மயி ஆகியோரை கிண்டல் செய்துள்ளார் நடிகர் ராதா ரவி.

பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ளார்.

இந்நிலையில் அவதார வேட்டை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதா ரவி கூறியதாவது,

மேக்கப்

மேக்கப்

நடிகைகளுக்கு நடுத்தெருவில் அல்லது ஹாலிலா மேக்கப் போட முடியும். தனி அறையில் தான் மேக்கப் போட முடியும். இயக்குனர் அந்த அறைக்குள் தவறி வந்துவிட்டால் அவர் கதை முடிந்தது. அவர் வந்தார், கிள்ளினார் என்று செய்தி வந்துவிடும். இதெல்லாம் சினிமாவின் வளர்ச்சிக்கு மைனஸ்.

ஹீரோயின்

ஹீரோயின்

ஹீரோவும், ஹீரோயினும் கட்டிப்பிடிக்கிறார்கள். அந்த ஷாட்டில் அவர் கிள்ளினால் அது ஒரு நியூஸ் இப்ப. துணை இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு இயக்குனர் ஆகிறார்கள். ஏதாவது பழி பாவத்தை போட்டு தயவு செய்து தொல்லை பண்ணாதீங்க. ஒரு இயக்குனர் படம் கிடைப்பதற்குள் அவர் விடும் ரத்தக்கண்ணீர் பலருக்கு தெரியாது.

சினிமா

சினிமா

எனக்கு 65 வயதாகிவிட்டது. இப்பத் தான் என்னை பத்தியே சொல்லியிருக்கிறார்கள். 30, 40 நாட்கள் குக்கிராமத்தில் நடித்துக் கொண்டிருக்கிறோம். அப்போது யாருடன் பேசுவது. படக்குழுவினர் குடும்பமாக பேசுவோம். அப்படி இருந்த சினிமா போய் தற்போது எல்லோரும் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

பயம்

பயம்

கதை சொல்லப் போனால் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று பயந்து தெருவில் வைத்து சொல்கிறார் இயக்குனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் படம் ஓடும். சினிமாவுக்கும், மீ டூவுக்கும் சம்பந்தம் இல்லை. மந்திரிகளுக்கும் மீடூவுக்கும் தான் சம்பந்தம். அது பெரிய இடத்து விவகாரம், நமக்கு எதற்கு அது எல்லாம்?

விஷால்

விஷால்

சித்தார்த் தான் கதாநாயகன். ஆண்களுக்கு பாதுகாப்பில்லை என்று தெரிவித்துள்ளார். நடப்பதை அன்றே சொன்னால் அன்றே பஞ்சாயத்து செய்து தீர்த்துவிடலாமே என்று விஷால் சரியாக சொல்லியுள்ளார். 10 வருடத்திற்கு முன்பு நடந்ததை இப்போ தேட வேண்டுமே. அப்படித் தான் ஒரு பொண்ணு ஆந்திராவில் சொல்லிச் சொல்லி போரடித்து இங்கு வந்து எல்லோரையும் கையை காட்டுது. இது எல்லாம் சினிமாவுக்கு அசிங்கம்.

புகார்

புகார்

என் அப்பா, அண்ணன், நான் என்று எங்கள் குடும்பமே வில்லன்கள். அதனால் நாங்கள் கெடுத்தால் தான் சரியாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். எங்களை பற்றி ஏதாவது வந்தால் இருக்கும்பா, வில்லன்களாச்சே என்கிறார்கள். அவர் படத்திலேயே அப்படித் தானே, நிஜத்தில் சொல்லவா வேண்டும் என்று நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X