ஒரு பெண்ணை கெடுத்தா சின்ன படம், பொள்ளாச்சி மாதிரி 40 பேரை கெடுத்தா பெரிய படம்: ராதாரவி
Recommended Video

சென்னை:பொள்ளாச்சி பயங்கரம் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார் நடிகர் ராதாரவி.
நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து அவர் நக்கலாக பேசினார்.

வீடியோ
பெரிய கேமரா எல்லாம் தேவையில்லை. செல்போனை வைத்து மொத்த கதையையும் எடுத்துவிடுகிறான். எங்கேயோ பொள்ளாச்சில கெடுத்தாங்களாம், எங்க கெடுத்தாங்கன்னே தெரியல. விட்டுக்கிட்டே இருக்கான். அதை யாரும் பார்க்காதீர்கள் என்று சொல்றாங்க. அதை பார்க்காம வேறு எதை பார்ப்பாங்க. பேருந்தில் பார்த்தால் 110 பயணிகளில் 100 பேர் அதை தான் பார்த்துக் கொண்டே போகிறான். இரண்டு பேர் தான் பார்க்கல, ஒன்னு டிரைவர், ஒன்னு கண்டக்டர்.

சர்ச்சை
நயன்தாராவை நடிகர் திலகம், புரட்சித் தலைவருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். நயன்தாரா நல்ல நடிகை தான். நயன்தாராவை பற்றி வராத செய்தி எல்லாம் இல்லை. அதையும் தாண்டி வந்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளில் மறந்துவிடுவார்கள். அதனால் அதை எல்லாம் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.

சீதா
நயன்தாரா பேயாவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் பேடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம்.

ஓவியா
90 மில்லியோ, 80 மில்லியோ ஒரு படம் வந்திருக்கு. சின்ன பசங்க அனைவரும் பார்க்கிறான். அந்த படம் பார்த்துவிட்டு ராக்கெட் எப்படி கண்டுபிடிக்கலாம், நாட்டு மக்களை எப்படி திருத்தலாம், சுத்தமாக இருப்பது எப்படி, சிகரெட் பிடிக்காமல் இருந்தால் வரும் நன்மை என்ன என்று அந்த படத்தில் கூறுகிறார்கள். அந்த படம் ஓடுது, நிறைய நாள் ஓடணும். நாம் இது மாதிரி ஒன்றரை லிட்டர்னு படம் எடுத்தால் என்ன என்று நினைக்கிறேன்.

வடசென்னை
நான் கெட்ட வார்த்தை பேசுகிறேன் என்கிறார்கள். வட சென்னை படத்தை பாருங்க அதில் எவ்வளவு கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் என தெரியும் என்றேன். பரியேறும் பெருமாள் படம் சூப்பர் என்றார்கள். உண்மையில் போர் அடித்தது. ஆனால் அறிவோடு இருந்தது.

பெரிய படம்
ஒரே நேரத்தில் ஒரு பெண்ணை கெடுத்தால் அது சின்ன படம். ஒரே நேரத்தில் பொள்ளாச்சி மாதிரி 40 பேரை கெடுத்தால் அது பெரிய படம். இது தான் பெரிய படத்திற்கும், சின்ன படத்திற்கும் உள்ள வித்தியாசம் என்றார் ராதாரவி.


Click it and Unblock the Notifications











