Radha Ravi: எல்லாம் ஏமாற்று வேலைதான்.. கங்குவா படத்துக்கு ஆள் இல்லை.. ஓபனாக பேசிய ராதாரவி!
சென்னை: ஒரு படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் பலரும் அந்தப் படம் குறித்து பேசுவார்கள். அதேபோல் ஒரு படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற பின்னர் அந்தப் படம் குறித்து பலரும் கருத்து தெரிவிப்பார்கள். அதேநேரத்தில் படம் தோல்வியைச் சந்தித்தால் அனைவரும் கப்சிப் மோடுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் கங்குவா படம் முற்றிலும் வேறாக உள்ளது. கங்குவா படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரும் தோல்விப் படமாக மாறியது. இந்நிலையில் படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மூத்த நடிகர் ராதா ரவி கங்குவா படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
கங்குவா படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, தீஷா பதானி, பாபி தியோல், கருணாஸ், நட்டி, கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, கார்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம். இந்தப் படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. படத்தினை மொத்தம் இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்ட படக்குழு, படத்தின் முதல் பாகத்தினை கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனால் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, படத்தின் சொதப்பலான திரைக்கதை. இதுமட்டும் இல்லாமல், படத்தின் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. படம் வசூல் ரீதியாகவும் பெரும் தோல்விப்படமாக மாறியது. படக்குழு படம் ரிலீஸ்க்கு முன்னர் படம் ரூபாய் 2000 கோடிகளை வசூல் செய்யும் படமாக அமையும் எனத் தெரிவித்திருந்தனர். ஆனால் படம் பெரும் தோல்விப்படமாக மாறியதால், கங்குவா படத்தினை திட்டமிட்டே தோல்விப் படமாக மாற்றிவிட்டார்கள் எனத் தெரிவித்தனர். இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கூட்டம் இல்லை: இந்நிலையில் தமிழ் திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய நடிகர் ராதாரவி கங்குவா படம் குறித்தும், கங்குவா படக்குழுவினர் குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேட்டி ஒன்றில் பேசுகையில்," நான் இன்னும் கங்குவா படத்தினைப் பார்க்கவில்லை. ஆனால் படத்தினை தியேட்டரில்தான் பார்க்கவேண்டும் என இருக்கின்றேன். காரணம் படத்தினை தியேட்டரில் பார்த்தால்தான் படத்திற்காக சூர்யா மற்றும் படக்குழுவினர் எந்த அளவுக்கு உழைப்பினைச் செலுத்தியுள்ளார்கள் எனத் தெரியும். ஆனால் உண்மையைச் சொல்லுகின்றேன், படத்திற்கு தியேட்டரில் கூட்டமே இல்லை.

ஏமாற்று வேலை: கங்குவா படத்தில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ளார். நானே நண்பர்களுக்காக பல படங்களில் நடித்துள்ளேன். அண்ணனுக்காக தம்பி நடிக்க மாட்டானா? படக்குழுவினர் பாகுபலி போல் கங்குவா இருக்கும் எனக் கூறவில்லை. ஆனால், நீங்களாகவே அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள். முதலில் சினிமா என்பது ஏமாற்று வேலை, நான் குத்துவதைப்போல் குத்துவேன், நீ அழுவதைப்போல் அழவேண்டும் அவ்வளவுதான். இதுதான் சினிமா" எனக் கூறினார். இவரது பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











