Radha Ravi: விஷால் ஒன்றும் குழந்தை இல்லை.. தன்ஷிகா முன் ராதாரவியின் Ruff & Tuff பேச்சு.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: யோகி டா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா வரும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்கள். இவர்களின் திருமண அறிவிப்பு குறித்த பேச்சுதான் தற்போது மொத்த திரையுலகிலும் சரி, இணையவாசிகள் மத்தியிலும் சரி பரபரப்பாக பேசப்படும் விஷயமாக உள்ளது. இந்நிலையில் விஷால் தனது திருமணம் குறித்து அறிவித்ததை அடுத்து, பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் டத்தோ ராதா ரவி பேசும் போது தனது வழக்கமான அதிரடி பேச்சால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள படம் யோகி டா. இந்த படம் இன்னும் சில வாரங்களில் ரிலீஸ் ஆகவுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷால், மூத்த நடிகர் டத்தோ ராதா ரவி, இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் விஷால் பேசும்போது, தானும் தன்ஷிகாவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தார். யோகி டா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இருவரும் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை தெரிவித்தது படத்தின் புரோமோஷனுக்கு உதவியாக இருக்கும் என திரைத்துறையில் பேசி வருகிறார்கள். இப்படியான நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டத்தோ ராதா ரவி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

விஷால் குழந்தையா?: அதாவது அவர் பேசும்போது, " விஷால் மற்றும் தன்ஷிகா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்கள். இருவருக்கும் வாழ்த்துகள். விஷால் தனக்கு ஏற்ற நடிகையை தான் தனது வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்துள்ளார். விஷால் குறித்து எனக்கு நன்றாகத் தெரியும். இயக்குநர் ஆர்.பி. உதயகுமார் சொன்னது போல விஷால் ஒன்றும் குழந்தை இல்லை. அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.
ஜாதகம் மட்டும்: அவர் எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வார். ஆனால் எதுவும் தெரியாத அப்பாவி போல வைத்துக் கொள்வார். நல்ல இதயம் கொண்டவர். திருமணத்திற்கு ஜாதகம் பார்ப்பது மட்டும் முக்கியமில்லை. உயரத்தில் பெரிதாக இருக்க கூடாது. பலத்தில் பெரியவராக இருக்க கூடாது. அந்த வகையில் விஷால் சரியானவரை தேர்வு செய்துள்ளார். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும். தன்ஷிகா பேராண்மை படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திலும் நன்றாக நடித்துள்ளார்.

Ruff & Tuff பேச்சு : நான் இப்போது எல்லாம் 6.30 மணிக்கு சாப்பிட்டுவிட்டு, மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கி விடுவேன். எனவே என்னால் இங்கு நீண்ட நேரம் செலவு செய்ய முடியாது. அதை நான் விஷாலிடமும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதனால் நான் இங்கிருந்து பாதியில் புறப்பட்டதும், விஷாலுக்கும் எனக்கும் ஆகாது என்பதால்தான் ராதா ரவி பாதியில் புறப்பட்டு விட்டார் என்று யாரும் சொல்ல வேண்டாம்" என்று பேசினார். ராதா ரவியின் இந்த Ruff & Tuff பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











