கெஞ்சிக் கேட்டேங்க.. அப்புறம்தான் கொடுத்தாங்க.. ராதாரவி கலகல!

சென்னை: ரொம்ப கெஞ்சிக் கேட்டு தனி ஷாட் வாங்கி நடிச்சேன் என்று ராதாரவி கலகலப்பாக கூறினார்.

நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் படம் தான் ராஜவம்சம். இந்த படம் ஒரு பெரிய குடும்ப படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல மூத்த நடிகர்களும் பல இள நடிகர்களும் ஒன்றாக ஒரு குடும்பமாக நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை கே.வி.கதிர்வேலு இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

நடிகர் ராதாரவி

நடிகர் ராதாரவி

படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ராதாரவி இந்த படத்தில் பல காட்சிகள் பல நடிகர்களை வைத்து குடும்பமாக தான் படமாக்கினார்கள்.இந்த பெரிய குடும்பத்துடன் இணைந்து நடித்தது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என்று ராதாரவி கூறினார். ஏனெனில் படப்பிடிப்பின் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். பல இடங்களில் நடிகர்கள் ஒன்று பேசி விடுவார்கள் அதனை எடுத்து டப்பிங்கில் வேறு மாதிரியாக மாற்றி விடுவார்கள் என்று ராதாரவி கூறினார்.

கெஞ்சினேன்

கெஞ்சினேன்

மேலும் முதல்முறையாக இந்த படத்தில் தான் நான் கெஞ்சி தனி ஷாட் கேட்டேன் ஏனெனில் இந்த குடும்பத்துடன் பல குழப்பமான ஷாட்களுக்கு இடையே நடிக்க முடியவில்லை என்று கூறினார் .இந்த படத்திலே ஒழுங்காக சரியான படி நடித்தது நான் மட்டும் தான் என்று கூறினார் ராதாரவி. மேலும் எந்த இசைவெளியீட்டு விழாவிலும் புரொடக்ஷ்ன் மேனஜரை பற்றி யாரும் குறிப்பிட்டு பேசமாட்டாரகள்.

சரியாக பணம் கொடுத்தனர்

சரியாக பணம் கொடுத்தனர்

ராதாரவி இந்த படத்தில் சரியான நேரத்தில் பணத்தை கொடுத்தார்கள் .அதுவரை எனக்கு சந்தோஷம் புரொடக்ஷ்ன் மேனேஜருக்கு நன்றி என்று கூறினார்.
மேலும் ஒரு புரடக்ஷ்ன் மேனேஜர் நினைத்தால் ஒரு நடிகரை எப்படி வேண்டுமானாலும் இழுத்தடிக்களாம் ஆனால் இந்த படத்தின் புரொடக்ஷ்ன் மேனேஜர் சரியாக செயல் பட்டார் என்று விழா மேடையில் பாராட்டினார் .

போராடி வாங்கினோம்

போராடி வாங்கினோம்

ராதாரவி டப்பிங் யூனியனின் முன்னால் தலைவராக செயல்பட்டவர்.இவர் தற்போது மேடையில் பேசும் போது டப்பிங் செய்பவர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்று நாங்கள் தான் போராடி வாங்கி தந்தோம் என்று கூறினார் .மேலும் டப்பிங்கில் வேலைகளை இழுத்தடித்து வேலை செய்பவர்கள் மேல் பல படங்களில் சுமையை ஏற்றுகிறார்கள் அதற்கும் தீர்வு கண்டுவருவதாக கூறினார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X