நயன்தாரா பத்தி வராத செய்தியே இல்லை: மேடையில் அசிங்கப்படுத்திய ராதாரவி

By Siva

Recommended Video

Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

சென்னை: கொலையுதிர் காலம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசினார்.

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார். அந்த மேடையில் அவர் கொலையுதிர் காலம் படத்தை பற்றி பேசியதை விட மற்றவர்களை அசிங்கப்படுத்தியது தான் அதிகம்.

அதிலும் குறிப்பாக படத்தின் ஹீரோயினான நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார்.

செய்தி

செய்தி

நயன்தாரா நல்ல நடிகை தான். நயன்தாராவை பற்றி வராத செய்தி எல்லாம் இல்லை. அதையும் தாண்டி வந்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் எல்லாத்தையும் 4 நாளில் மறந்துவிடுவார்கள். அதனால் அதை எல்லாம் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா என்றார் ராதாரவி.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நயன்தாரா சர்ச்சைகளில் சிக்கியது உண்மை தான். ஆனால் அதை எல்லாம் அவர் மேடையில் மீண்டும் கூறி அசிங்கப்படுத்தியது நயன்தாராவின் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

சீதா

சீதா

நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதாவாகவும் நடிக்கிறார். தற்போது எல்லாம் யார் வேண்டுமானாலும் சாமி வேஷம் பேடலாம். ஏன் என்றால் பார்த்த உடனேயே கும்பிடறவரையும் போடலாம். பார்த்த உடனேயே கூப்பிடவரையும் போடலாம் என்றார் ராதாரவி. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதுடன், நயன்தாராவை தொடர்புபடுத்தி பேசினார் அவர்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவது இல்லை. இந்நிலையில் படத்தை துவங்கும் போதே விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்றார் ராதாரவி. நயன்தாராவின் பட விழாவில் கலந்து கொண்டு அவரையே கேவலமாக பேசியுள்ளார் ராதாரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X