Aarti - Ravi - Keneeshaa: இரண்டு பெண்கள் சேர்ந்து ஜெயம் ரவியை வாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.. ராதா ரவி பேச்சு

சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாக உள்ளது. ரவி மோகன் தரப்பில் இருந்து அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் குடும்பத்தின் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. இப்படி இருக்கும்போது, அவர்களின் விவாகரத்து குறித்து பலரும் பல கருத்துக்களைச் சொல்லி வரும் நிலையில், நடிகர் ராதா ரவி அண்மையில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி கடந்த 2009ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளார்கள். 16 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த ரவி மோகன் கடந்த ஆண்டு தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாகவும், ஆர்த்தியுடன் விவாகரத்து செய்யப் போவதாகவும் அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

ரவி மோகன் விவாகரத்து அறிவித்த பின்னர், அவரின் விவாகரத்திற்கான காரணங்கள் என திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் பலவிதமாக பேசி வந்தார்கள். குறிப்பாக ரவி மோகனின் சம்பளத்தில் இருந்து அனைத்தையும் ஆர்த்தியே நிர்வகிப்பதாகவும், ஒரு ரூபாய் பணம் வேண்டும் என்றால் கூட ஆர்த்தியிடம் பெற்றுதான், ரவி செலவு செய்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. இது மட்டும் இல்லாமல், ரவி மோகன், கெனிஷா என்ற பாடகியுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருவதாகவும் பேச்சுகள் அடிபட்டது. கெனிஷா குறித்த பேச்சுகள் அடிபடும் போது, தனது சொந்த விஷயங்கள் குறித்து யாரும் பேச வேண்டாம் என்று ரவி மோகன் தெரிவித்திருந்தார்.

Radha Ravi Speech About Ravi Mohan And Aarti Divorece Case

விவாகரத்து பிரச்னை: ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, ரவி நிகழ்ச்சி ஒன்றுக்கு தோழி கொனிஷாவுடன் கலந்து கொண்டார். இது பெரிய விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட, அதற்கு ரவி மோகன் பதிலடி கொடுக்க, அதன் பின்னர் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் அறிக்கை வெளியிட என குடும்பப் பிரச்னை பெரும் பிரச்னையாக நாளுக்கு நாள் மாறி வருகிறது.

கெனிஷா: இந்நிலையில் ஆர்த்திக்கு ஆதரவாக சிலரும், ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாடகி சுசித்ரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரவி மோகன் மற்றும் கெனிஷாவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பாடகி சுசித்ராவின் கருத்துக்களை பாடகி கெனிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

Radha Ravi Speech About Ravi Mohan And Aarti Divorece Case

ராதா ரவி - ஜெயம் ரவி: இந்நிலையில் யோகி டா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மூத்த நடிகர் டத்தோ ராதா ரவி நடிகை சாய் தன்ஷிகா குறித்து பேசும்போது, ஜெயம் ரவி குறித்தும் பேசினார். அதாவது, தன்ஷிகாவை முதன் முதலாக பேராண்மை படத்தில் தான் பார்த்தேன். இரண்டு பெண்கள் சேர்ந்தாலே ஒரு கட்சி ஆகிவிடும். ஆறு பெண்கள் சேர்ந்து கொண்டு ஜெயம் ரவியை வாட்டுவார்கள். இப்போது வாட்டுகிறார்களே அது போல பயங்கரமாக வாட்டுவார்கள்" என்று தெரிவித்தார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Take a Poll

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X