பொய் பெயர்கள வச்சு உண்மை கதைன்னு படம் எடுக்குறாங்க.. பொத்தாம்பொதுவாய் வச்சு செய்த பிரபல நடிகர்!
சென்னை: பொய் பெயர்களில் உண்மை கதை என்று படம் எடுக்கிறார்கள் என பிரபல நடிகர் பொத்தாம் பொதுவாய் விளாசி தள்ளியுள்ளார்.
யூட்யூப்பில் திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன் என அழைக்கப்படும் இளமாறன். இவர் ஆண்டி இந்தியன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த மாதம் வெளியானது. அரசியலை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிலீஸுக்கு தயார்
இதில் மாறன், ஆடுகளம் நரேன், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் பல இடம் பெற்றதால் சென்சார் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் இந்த திரைப்படம் சென்சார் செய்யப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

நடிக்கலாமா? சிக்கல் வருமா?
இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் ராதா ரவி உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ராதா ரவி, இந்தப்படத்தில் நடிக்கலாமா, ஏதாவது சிக்கல் வருமா என்று முதலில் யோசித்தேன். படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை இது.

ஒரு கூட்டம் ரெடி
அப்போ யார் முதல்வராக இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.. படம் பார்க்கும்போது யாரை பிரதிபலிச்சிருக்கேன் என்பது தெரியும்.. ஆனால் இந்த நேரத்தில் இந்தப்படம் வெளியாகும் போது யார் என்ன விதமா நினைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இந்தப்படம் வெளியானதும் இதற்கு விவாத மேடை நடத்துவதற்கு ஒரு கூட்டம் தயாரா இருக்கும்.

பொய் பெயர்களில் உண்மை கதைன்னு
இந்தக்காலத்தில் கான்ட்ரவர்ஸியா படம் எடுத்தால் நிச்சயமாக ஓடும். இப்போது தான் பொய் பெயர்களைச் சூட்டி உண்மை கதைன்னு படம் எடுக்கிறார்கள்.. அதெல்லாம் நல்லாத்தானே ஓடுது என்று பொத்தாம் பொதுவாய் அடித்து விட்டார். ஆண்டி இந்தியன் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை என அனைத்துமே ப்ளூ சட்டை மாறன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











