அக்கா கார்த்திகா, தங்கை துளசியைடுத்து நடிக்க வரும் விக்னேஷ்
சென்னை: ராதாவின் மகள்கள் அம்மாவைப் போன்று நடிகையாகிவிட்டனர். இந்நிலையில் ராதாவின் மகனும் நடிக்க வருகிறார்.
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் அம்பிகாவும், அவரது தங்கச்சி ராதாவும். திருமணத்திற்கு பிறகு இருவரும் திரையுலகை விட்டு ஒதுங்கினர். அதன் பிறகு அம்பிகா மட்டும் நடிக்க வந்துவிட்டார். ஆனால் ராதா வரவில்லை. ராதா நடிக்க வராவிட்டாலும் தனது 3 பிள்ளைகளையும் தன் பாணியில் திரையுலகில் இறக்கிவிடுகிறார்.
முதலில் தனது மூத்த மகள் கார்த்திகாவை நடிகையாக்கினார். தொடர்ந்து கடைசி மகள் துளசியையும் நடிக்க வைத்தார். தற்போது தனது மகன் விக்னேஷையும் நடிகராக்குகிறார்.

நடிகையான கார்த்திகா
ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானார். ஆனால் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்ததோ தமிழ் படமான 'கோ'. தற்போது பாரதிராஜாவின் இயக்கத்தில் அன்னக்கொடியும் கொடிவீரனில் நடித்துள்ளார்.

அக்கா பாதையைப் பின்பற்றிய துளசி
அக்கா கார்த்திகா போன்று துளசியும் நடிகையாகிவிட்டார். மணிரத்னத்தின் கடல் படம் மூலம் அறிமுகமான அவர் தற்போது ஜீவாவுடன் யான் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகராகும் விக்னேஷ்
அக்கா கார்த்திகா, தங்கை துளசியை அடுத்து திரையுலகிற்கு வருகிறார் விக்னேஷ். இந்த ஆண்டு அவர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகிறார். அதனால் தேர்வை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஹீரோவாகிறார்.


Click it and Unblock the Notifications











