Vijay: கனவில் விஜய்.. லியோ பார்த்திபனைச் சந்தித்த ரியல் பார்த்திபன்.. புது பட அப்டேட்டும் வந்துடுச்சே!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே உள்ளதால், அதற்கான பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கனவில் விஜய் வந்ததாகவும் விஜய்யுடன் தான் வெகு நேரம் பேசியதாகவும் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் பார்த்திபன் இணைந்து இதுவரை படங்களில் நடித்தது கிடையாது. ஆனால், பார்த்திபன் மற்றும் அஜித் நடித்த நீ வருவாயென படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஒப்புக் கொண்டார். மேலும், பார்த்திபன் நடித்த கதாபாத்திரத்தில் விஜய்யை நடிக்க அணுகியபோது, விஜய் என்னிடம் கால்ஷீட் இல்லை. எனவே நான் அஜித் நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அஜித்தை மெயின் கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லுங்கள் எனக் கூறினார். ஆனால் அஜித்திற்கும் கால்ஷீட் மாற்ற முடியாது என்பதால், படத்தில் பார்த்திபன் நடித்தார்.

Radhakrishnan Parthiban Vijay Vijay TVK

விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், வாழ்த்து கூறியது மட்டும் இல்லாமல், விஜய்க்கு ஆதரவாகவும், விஜய்யின் செயல்பாடுகள் குறித்து பார்த்திபன் கருத்து தெரிவித்து வந்துள்ளார். விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தனது பாணியில் பதில் அளித்து வந்த பார்த்திபன் இன்று அதாவது பிப்ரவரி 20ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் விஜய் தனது கனவில் வந்தார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

Radhakrishnan Parthiban Vijay Vijay TVK

விஜய் - கனவு: அதாவது அவர் பதிவில், " நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேநீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால், அது கனவு ஏன்தான் இப்படி ஒரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்பந்தமான மந்தமான என் பதில்கள் ...இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்" என உள்ளது.

Radhakrishnan Parthiban Vijay Vijay TVK

தவெக: இவரது இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பார்த்திபனிடம் பல கேள்விகளைக் கேட்டனர். அதற்கு பல கேள்விகளுக்கு பார்த்திபனும் பதில் அளித்தார். இணைய வாசி ஒருவர், " தவெக வில் சேர ஆசை இருந்தால் அதை நீங்கள் நேரடியாக செல்லுங்ககள்..." என பதிவிட்டார். அதற்கு பார்த்திபன், " இல்லை என்பதால் இதை இடுகிறேன் நண்பா! இருந்தால் கமுக்கமாக இணைந்திருப்பேனே" என பதில் அளித்தார்.

அப்டேட்: அதேபோல் மற்றொரு இணைய வாசி, " சார் இதை இங்க சொல்லியே ஆகனும், நேற்று இரவு என்னோட கனவில் நீங்க வந்தீங்க !.! சினிமா பத்தி பேசிட்டு இருந்தோம். தங்களிடம் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படம் எடுக்கச் சொல்லி ஒரு கோரிக்கை வைத்தேன். நீங்களும் யோசித்து விட்டு சரினு சொன்னீங்க. இது நடக்குமா சார் ?" என கேள்வி எழுப்ப, அதற்கு பார்த்திபன், ' இது விரைவில் பலிக்கும் கனவு' என பதில் அளித்துள்ளார். ஒரு ரசிகர், ரியல் பார்த்திபன் லியோ பார்த்திபனைச் சந்தித்தார் என பதிவிட்டுள்ளார். இவரது, இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Radhakrishnan Parthiban Vijay Vijay TVK

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X