twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    60 வயது மாநிறம்.. என்னாவா இருக்கும்?.. ஆர்வத்தைத் தூண்டும் ராதாமோகன்

    இயக்குனர் ராதாமோகனின் அடுத்த திரைப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    |

    Recommended Video

    60 வயது மாநிறம்..ஆர்வத்தைத் தூண்டும் ராதாமோகன்- வீடியோ

    சென்னை: இயக்குனர் ராதாமோகனின் 60வயது மாநிறம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

    ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட மொழி சினிமாவின் தரம் எப்படி இருந்தது என்பதை அந்த மொழியில் வெளிவந்த சில குறிப்பிட்ட சினிமாக்கள் தீர்மாணிக்கிறது என்று சொல்லலாம்.

    Radhamohan next movie!

    அந்த வகையில், வழக்கமான கல்லா கட்டும் நோக்கில் எடுக்கப்படும் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு மத்தியில், கலையின் தாகத்தை, கலை மீதுள்ள மோகத்தை சற்றே கூட்டும் விதமாக ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காணக்கிடைத்திருக்கிறது.

    அதுதான், இயக்குனர் ராதாமோகனின் அறுபது வயது மாநிறம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம்பிரபு என வித்தியாசமான கூட்டணியில் வெளிவந்திருக்கிறது.

    காஞ்சிவரம் திரைப்பட இறுதிக்காட்சிகளில் அழக்கூடிய பிரகாஷ்ராஜ் லேசாக ஞாபகம் வருகிறார். ஆனால் மாறுபட்ட இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவிற்கு புதிதாக ஏதோ சொல்ல வருவது புரிகிறது.

    காந்தியின் மூக்குக்கண்ணாடியை வளைத்து 60 வயது மாநிறம் எனக் டைட்டில் போட்டுள்ளனர். ராதாமோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் முடிந்த பிறகுதான் படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியிடவேண்டுமென முடிவு செய்துள்ளனர்.

    இப்படத்தில் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விவேக் ஆனந்த ஒளிப்பதிவு செய்துள்ளார். எப்போதும் புதிய முயற்சிகளின்மூலம் நல்ல படங்களைக் கொடுத்து வரும் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளர்.

    படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகள் முடிந்துள்ளதால் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

    English summary
    V Creations silently completed their next movie 60 vayathu maaniram. This movie is directed by Rashamohan. Prakashraj, Samuthirakkani and Vikramprahu in leads. Ilaiyaraja worked for soundtrack. It will be release in august.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X