twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தவறாக பேசியிருந்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன்… ராதாரவி அதிரடி!

    தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என ராதாரவி தெரிவித்தார்

    |

    கோவை: தவறாக பேசினால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

    மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவையில் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

    Radharavi about Kalaignar!

    அந்த நிகழ்வில் பேசிய நடிகர் ராதாரவி மனித மலத்தை மனிதனே அல்லும் அவல நிலையைக் கண்டு கொதித்து, அருந்ததியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளித்தார். வட மாநிலத்தில் சில அமைப்புகள் அம்பேத்கர் பெயரே இந்தியாவில் இருக்கக் கூடாது என முழக்கமிட்டபோது அதை எதிர்த்து அம்பேத்கருக்கு சிலை வைத்தார். என கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டார்.

    எம்.ஆர்.ராதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையே இருந்த நட்பை விவரித்தார். தமிழக முதல்வராவதற்கு ஸ்டாலினுக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது. ஐம்பது வருட அனுபவம் உள்ளவர் ஸ்டாலின் எனக் கூறிவிட்டு, வீடுகட்டுவதற்கு முட்டு கொடுக்க சவுக்கு மரங்களை பயன்படுத்துவார்கள். வீடு கட்டி முடித்துவிட்டு கிரஹப்பிரவேசம் செய்யும்போது சவுக்கு மரத்தை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். அதுபோல் உழைத்தவர்களை உதாசீதனப்படுத்தாதீர்கள் எனக் கோரினார்.

    இறுதியில், நாம் எல்லோருமே கலைஞரின் குடும்பம்தான் எனக் கூறிய ராதாரவி, இந்த அமைப்பு பிடிக்காதவர்கள் இதிலிருந்து விலகி விடுங்கள் எனக் கூறினார்.

    எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நான் பேசியதில் எதும் தவறில்லை என நினைக்கிறேன், தவறாக பேசியிருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்கமாட்டேன் என அவருடைய பாணியில் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

    English summary
    Actor Radharavi opened about the friendship between his father MR.Radha and Kalaignar in Marakkamudiyuma program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X