எஸ்பிபி-யின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ விரைவில் தொடங்கப்படும்.. ராதாரவி அறிவிப்பு!
சென்னை : மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் திருவுருவ படத்தை திறந்து வைத்த நடிகர் ராதாரவி விரைவிலேயே எஸ்பிபி-யின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ உருவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் எக்கச்சக்கமான பாடல்களை பாடி அனைத்து மொழி ரசிகர்களையும் தன் கம்பீரமான குரலின் மூலம் மயக்கி வந்த பாடகர் எஸ் பி பி சில நாட்களுக்கு முன்பு கொரானா நோய்த்தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்த செய்தியை கேட்ட பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் நடிகர் ராதாரவி எஸ் பி பி-யின் பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ அவரின் நினைவாக விரைவில் திறக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஏற்க முடியாத மறைவிற்கு
பாடகர் எஸ் பி பி-யின் ஏற்க முடியாத மறைவிற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் திரைப் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் சென்று தனது இரங்கலை தெரிவித்து வந்தார்.

இரங்கலை தெரிவித்திருந்தனர்.
மேலும் நடிகர் கமல்ஹாசன், இசைஞானி இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி என பலரும் எஸ்பிபி மறைந்த துயரத்தையும் ஏற்று கொள்ள முடியாத இழப்பையும் தாங்கியவாறு தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர்.

வாழ்நாள் உறுப்பினரான
இந்நிலையில் நடிகர் ராதாரவி செப்டம்பர் 30 ஆம் தேதி டப்பிங் யூனியனில் வாழ்நாள் உறுப்பினரான எஸ் பி பி யை கௌரவிக்கும் விதமாக டப்பிங் யூனியன் செயற்குழுவினருடன் ஒன்றிணைந்து எஸ்பிபி-யின் திருவுருவ படத்தை திறந்து வைத்து இரங்கல் தெரிவித்திருந்தார்.

விரைவில் திறக்கப்படும்
மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை இசைத்துறை சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

அண்ணாத்த ஓபனிங் சாங்
அனைத்து ரசிகர்களுக்கும் தமிழ் திரையுலகிற்கு மிகவும் நெருக்கமான எஸ்பிபி இன்றுவரை எக்கச்சக்கமான பாடல்களை பாடியிருக்கும் நிலையில் கடைசியாக ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஓபனிங் சாங்கை பாடியுள்ளார்.

எஸ்பிபி-யின் பெயரில்
பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்ட எஸ்பிபி-யை கௌரவிக்கும் விதமாக ராதாரவி தனது குழுவுடன் இணைந்து விரைவில் எஸ்பிபி-யின் பெயரில் டப்பிங் ஸ்டுடியோ உருவாக்க உள்ளதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











