தைரியம் இல்லாத காமெடியன்! - வடிவேலுவை திட்டிய ராதாரவி

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பி.வெற்றி வேலை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் ராதாரவி பேசும்போது, விஜயகாந்தை நடிகர் வடிவேலு விமர்சித்து பேசி வருகிறார். அவர் தைரியம் இல்லாத காமெடி நடிகர். ஏற்கனவே விஜயகாந்த் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்றார். ரிஷி வந்தியம் தொகுதியில் விஜயகாந்த் நிற்கிறார். தைரியம் இருந்தால் அங்கு வடிவேலு போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் நிற்கவில்லை. தைரியம் இல்லாதவர். வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
மாம்பழம் சீசன் மாறுவது போல் பா.ம.க. அந்த பக்கம் போய் உள்ளது. தி.மு.க. கூட்டணியை வீழ்த்தி அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. தமிழக மக்களையும், அ.தி.மு.க.வையும் ஜெயலலிதா தனது குடும்பமாக பார்க்கிறார். வெற்றி வேலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்," என்றார்.


Click it and Unblock the Notifications











