மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தில் ராதாரவி!
மிஷ்கின் இயக்கி, நடித்து வரும் புதிய படமான ‘பிசாசு'வில் முதல் முறையாக இணைகிறார் ராதாரவி.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் படமாக்கி வருகின்றனர்.
4

0 அடி உயர பேக்டரி செட் அமைத்து, அதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மிஷ்கின். பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் படப்பிடிப்பு நடக்கிறது.
நாகா, பிரயகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். நடிகர் ராதாரவி முதல் முறையாக மிஷ்கினுடன் இணைகிறார் இந்தப் படத்தில். படத்தின் முக்கிய பாத்திரமாக வருகிறார் அவர்.
பிசாசு படத்தை இயக்குனர் பாலா தனது சொந்த நிறுவனமான பி ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கு அருள் இசையமைக்கிறார். 2 மணி நேரப் படம் இது. வரும் நவம்பரில் வெளியாகிறது பிசாசு.


Click it and Unblock the Notifications











