“எல்லாப் புண்ணியமும் அவங்களுக்கு தான்”.. நயனுக்கு மறைமுகமாக நன்றி சொன்ன ராதாரவி!

தேர்தல் சமயத்தில் தன்னை அமைதியாக இருக்க வைத்ததற்கு நயன்தாரா தான் காரணம் என நடிகர் ராதாரவி மறைமுகமாக குறிப்பிட்டார்.

Recommended Video

'எனக்கு பிடிக்கல... நான் பேச மாட்டேன்'... அடம்பிடித்த ராதாரவி..சமாதானம் செய்த ராதாரவியை பேச வாய்த்த!

சென்னை: கொரில்லா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா பெயரை மறைமுகமாக குறிப்பிட்டார்.

ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொரில்லா. இந்த படத்தில் கொரில்லா குரங்கு ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. டான் சாண்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.

கொரில்லா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, தேர்தல் சமயத்தில் தன்னை அமைதியாக இருக்க வைத்ததற்கு நயன்தாரா தான் காரணம் என மறைமுகமாக குறிப்பிட்டார்.

எல்லோரும் கொண்டாடுகிறார்கள்

எல்லோரும் கொண்டாடுகிறார்கள்

இதுகுறித்து அவர் பேசியதாவது, "இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள், யார் தோற்றார்கள் என்பதே தெரியவில்லை. தோற்றவர்களும் கொண்டாடுகிறார்கள், ஜெயித்தவர்களும் கொண்டாடுகிறார்கள்.

 தனிக்கட்சி தொடங்காததற்கு காரணம்

தனிக்கட்சி தொடங்காததற்கு காரணம்

கூட்டம் கூடி மக்கள் கைத்தட்டினால் ஜெயித்துவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது. எனவே கூட்டம் கூடுவதை வைத்து யாரும் தனிக்கட்சி தொடங்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது புரிந்ததால் தான் நான் புதுக்கட்சி தொடங்கவில்லை.

அவங்களுக்கு நன்றி

அவங்களுக்கு நன்றி

தேர்தல் சமயத்தில் நான் அமைதியாக வீட்டில் இருந்தபடி வேடிக்கை பார்ப்பது இது தான் முதல்முறை. இந்த வாய்ப்பு வருவதற்கு அவங்க தான் காரணம். அதனால் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்", என்றார்.

நயன்தாரா

நயன்தாரா

ராதாரவி அவங்க எனக் குறிப்பிட்டது நயன்தாராவை தான்.கொலையுதிர் காலம் பட விழாவில் நயன்ராதா குறித்து ராதாரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X