தனுஷின் மறுபக்கம் இதுதான்.. வேண்டுமென்றே ப்ரெஷர் போடுகிறார்கள்.. ராதாரவி ஷேரிங்ஸ்
சென்னை: தனுஷ் கடைசியாக ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் தனுஷுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ரெட் கார்டு போடப்பட்ட விவகாரம் குறித்து ராதாரவி ஓபனாக பேசியிருக்கிறார்.
இந்திய அளவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் அவர் ராயன் படத்துக்கு முன்னதாக கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் வழக்கம்போல் தனுஷ் தனது கேரக்டரை மிகச்சிறப்பாக செய்தார். ஆனால் தனுஷ் ரசிகர்களுக்கு சோகம் என்னவென்றால்; போட்டியாக களமிறங்கிய அயலான் திரைப்படத்திடம் கேப்டன் மில்லர் தோற்றதுதான். இருந்தாலும் மில்லரில் விட்டதை ராயனில் பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இயக்குநர் தனுஷ்: அதேபோல் தனுஷ் முதலில் இயக்கிய பவர்பாண்டி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே ராயன் படத்திலும் இயக்குநராக தனுஷ் தனது முத்திரையை பதிப்பார் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக படம் அமைந்தது. முக்கியமாக படத்தின் ஸ்க்ரீன் ப்ளேவில் வடசென்னை உள்ளிட்ட படங்களின் வாசம் வெகுவாக அடித்ததாக ஓபனாகவே பேச ஆரம்பித்தனர்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: இதற்கிடையே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார். அதில் அனிகா, தனுஷின் உறவுக்கார பையன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்தப் படமும் தனுஷின் முத்திரையை பதிக்கும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே அவர் குபேரா படத்தில் நடித்துவருகிறார். இதை முடித்துவிட்டு இளையராஜா பயோபிக்கிலும் நடிக்கிறார்.
ரெட் கார்டு: சூழல் இப்படி இருக்க தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதாவது பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸை வாங்கிவிட்டு அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
ராதாரவி பேச்சு: இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராதாரவி இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “தயாரிப்பாளர் பக்கம் சொல்வதை நாம் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தவறு இருக்கிறது. சில நேரங்களில் தவறு இருக்கிறது. இப்போது தனுஷ் மீது தடை போட்டிருக்கிறார்கள். தனுஷ் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் எல்லோருக்கும் உதவி செய்யக்கூடியவர். அவரது படம் நன்றாக ஓடுகிறது என்பதால் அவர் மீது எல்லோரும் ப்ரெஷர் போடக்கூடாது. தனுஷும் ஒரு தயாரிப்பாளர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.


Click it and Unblock the Notifications











