»   »  விஷாலை கழுவிக் கழுவி ஊத்திய ராதாரவியா இப்போ இப்படி சொல்வது?: வியக்கும் கோலிவுட்

விஷாலை கழுவிக் கழுவி ஊத்திய ராதாரவியா இப்போ இப்படி சொல்வது?: வியக்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சென்னை அண்ணாநகரில் இருக்கும் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

ரஜினி, கமல்

ரஜினி, கமல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் ஆகியோர் வாக்களித்தனர். நடிகர் ராதாரவியும் வாக்களித்தார். வாக்களித்த பிறகு ராதாரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

விஷால்

விஷால்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சங்கத்திற்கு நன்மை செய்ய வேண்டும். தேர்தலில் விஷால் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை என்று ராதாரவி செய்தியாளர்களிடம் கூறினார். இது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

ராதாரவி

ராதாரவி

நடிகர் சங்க தேர்தலின்போது ராதாரவி விஷாலை கடுமையாக விமர்சித்தார். விஷால் என்றாலே குற்றம் என்றாகிவிட்டது. அவருக்கு அனுபவம் இல்லை என்று எல்லாம் விமர்சித்தார்.

விமர்சனம்

விமர்சனம்

நடிகர் சங்க தேர்தலின்போது விஷாலும், ராதாரவியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் ராதாரவியின் மனமாற்றம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
Actor Radharavi casted his vote in the Tamil film producers council election and said that there is nothing wrong in Vishal contesting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil