நவரச நாயகன் கார்த்திக் பக்கம் நெகட்டிவ் மட்டும்தான் இருக்கா?.. பாசிட்டிவ் சைடை புட்டு புட்டு வைத்த ராதாரவி

சென்னை: நவரச நாயகன் கார்த்திக் பற்றி பிரபல இயக்குநரும் நடிகருமான பாரதி கண்ணன் கொடுத்த ஒரு பேட்டி சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆனது. அவரைத் தொடர்ந்து பலரும் கார்த்திக் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவற்றில் பெரும்பாலும் அவரது நெகட்டிவ் பக்கங்களே இருந்தன. எனில் கார்த்திக்கிடம் திறமையை தாண்டி நல்ல குணங்களே இல்லையா என்ற கேள்வி எழுந்த சூழலில் சீனியர் நடிகர் ராதாரவி புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

கோலிவுட்டில் 90ஸில் ஃபேமஸ் இயக்குநராக வலம் வந்த பாரதி கண்ணன் இப்போது நடிகராகவும் கலக்கிவருகிறார். அவர் சில வாரங்களுக்கு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் நவரச நாயகன் கார்த்திகிடம் அப்போது 10 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் அவர் ஷூட்டிங்கே வரவில்லை என்றும் கூறிவிட்டு; மேற்கொண்டு சில விஷயங்களை ஓபனாகவே பேசினார். அவர் பேசிய விதமும், தோரணையும் இணையத்தில் வைரலானது.

பலரும் பேசினார்கள்: பாரதி கண்ணன் அப்படி பேசியதைத் தொடர்ந்து யூடியூபில் பல பத்திரிகையாளர்கள் கார்த்திக் பற்றி பேசிக்கொண்டே இருந்தார்கள். அவை அனைத்திலும் கார்த்திக் பற்றி நெகட்டிவ் பக்கங்களே இருந்தன. என்ன இது எல்லோருமே நெகட்டிவ் பற்றி பேசுகிறார்களே; எனில் நவரச நாயகனிடம் நல்ல குணங்களே இல்லையா என்ற கேள்வியும் அனைவரிடமும் எழுந்திருந்தது.

Radharavi Reveals the Untold Good Side of Navarasa Nayagan Karthik
Photo Credit:

ராதாரவி பேட்டி: இந்நிலையில் சீனியர் நடிகர் ராதாரவி கார்த்திக் பற்றி தனியார் ஊடகத்துக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "பாரதி கண்ணனும் டப்பிங் யூனியனில் மெம்பராக இருக்கிறார். அவர் கார்த்திக் பற்றி பேசியது எதார்த்தமாகத்தான் பேசியிருக்கிறார். ஆனால் அதை ஏன் இப்போது பேச வேண்டும். அப்போதே சொல்லியிருக்கலாமே. கார்த்திக் முத்துராமனின் மகன். அதுமட்டுமின்றி திறமையான நடிகர். எனவே பேசியிருக்க வேண்டாம்.

எல்லோரும் கன்டென்ட்டுதான்: பாரதி கண்ணன் முதலில் பேசியது எதார்த்தம்தான். ஆனால் அதற்கு பிறகு பேசினார்கள் பாருங்கள். அவர்கள் எல்லாமே கன்டென்ட்டுக்காகத்தான் பேசினார்கள். அவர்கள் கேட்ட செவி வழி செய்தியைத்தான் யூடியூபில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியதுதான் ஓகே. ஏனேனில் அவர் காதில் கேட்டதை சொல்லவில்லை; தனக்கு நடந்த அனுபவத்தை சொன்னார்.

உதவிய கார்த்திக்: கார்த்திக் என்னை பொறுத்தவரை நல்ல மனிதர். நானும் அவரும் சோலைகுயில் படத்தில் நடித்திருந்தோம். இந்நாட்டு மன்னர்கள் படப்படிப்பு நடந்துகொண்டிருந்தபோது எனது நண்பர் ஒருவரிடம் 'இது நம்ம பூமி' படத்தை ரிலீஸ் செய்ய இரண்டரை லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். இதை நான் கார்த்திக்கிடம் நேரடியாக கூட கேட்கவில்லை. இது அவரது காதுகளுக்கு சென்றது.

நன்றியெல்லாம் ஏன் பார்ட்னர்: உடனே அவர் தனது மேனேஜரிடம் இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டிருந்தார். நான் அவருக்கு நன்றி சொல்ல ஃபோன் செய்தேன். அதற்கு அவரோ ஏன் பார்ட்னர் நன்றியெல்லாம் சொல்கிறீர்கள் என கேட்டுவிட்டார். பணம் கொடுத்தது மட்டுமின்றி அந்தப் படத்தின் கோயம்புத்தூர் உரிமையையும் வாங்கிக்கொண்டார். இப்படி ஏகப்பட்ட நல்ல குணங்கள் அவருக்கு இருக்கின்றன. அதையெல்லாம் பேசலாமே" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X