தரையில் படுத்து உறங்கினார் விஜய்... சர்கார் ஆடியோ லாஞ்ச்சில் ராதாரவி!

சென்னை: சர்கார் இசைவெளியீடு சின்ன மாநாடு போல் உள்ளதென ராதாரவி தெரிவித்தார்.

திலிப்பாக இருக்கும் போது ஏஆர் ரஹ்மானை நான் முதல் படத்தில் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. சினிமாவில் வளரும் போது திறமை தெரியாது. என்னையே வளர்ந்த பிறகுதான் எம்.ஆர.ராதா மகன் என்று சொன்னார்கள் என்றார்.

Radharavi speech in Sarkar movie audio launch!

மேலும், விஜய்யின் முதல் படத்தில் அப்பாவாக நடித்தவன் என்ற முறையில், அவர் எப்போதும் என்னை நன்றி உணர்ச்சியோடு வணங்கக்கூடியவர் எனப் பெருமிதத்தோடு பேசினார்.

மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் சாதாரணமாக தரையில் படுத்துக்கொண்டார் என்றார். இதுபோல் செய்யும் இரண்டாவது நடிகரைப் பார்க்கிறேன். நல்ல மனம் படைத்த விஜிம்மா அவர்களுக்கு இன்னும் பெரிய வளர்ச்சி வரவேண்டும் என்று ராதாரவி பேசினார்.

நீ இந்த சமுதாயத்திற்குத் தேவை என்று சொன்னதும் கர ஒலி அரங்கை கிழித்தது. சமுதாயத்திற்கு தேவை என்று சொன்னதற்கே இப்படி என்றால், சமுதாயத்திற்காக இறங்கினால் எப்படிம் இருக்கும் என விஜய்யின் அரசியல் எண்ட்ரி கேள்வியைக் கேட்டுவிட்டு, நான் எதையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றார்.

இறுதியாக, இது இசை வெளியீட்டு விழா கிடையாது. ஒரு மாநாடு போல உள்ளது என சொல்லிவிட்டு சர்கார் சரியாக நடக்காததால் இந்த சர்கார் வெற்றிபெறும் என முடித்துக்கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X