‘’ராதே ஷ்யாம்’’ செட் மட்டுமே இத்தனை கோடியா?... மிரண்டு போன ரசிகர்கள் !
சென்னை : ராதே ஷ்யாம் படத்தின் செட்டுக்கான செலவை கேட்டு ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவுள்ள ராதே ஷ்யாம் மார்ச் 11 ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
பல ஆண்டுகளுக்கு பிறகு ராதே ஷியாம் படத்தின் மூலம் மீண்டும் ஒரு காதல் படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையை கொண்ட திரைப்படமாகும்.

ராதே ஷ்யாம்
பாகுபலி படத்திற்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ளார் பிரபாஸ். உலகத்தரத்திற்கு உருவான பாகுபலி படத்தால், இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம்.

5 மொழிகளில்
யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திலிருந்து சமீபத்தில் இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் ஷங்கர் ராஜா பாடி இருந்தார்.

மார்ச் 11 ரிலீஸ்
ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. கிட்டத்தட்ட 400 தியேட்டர்களில் ராதே ஷ்யாம் வெளியாகும் என தெரிகிறது.

பல கோடி செலவில் செட்
இந்நிலையில், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்திற்கு அமைக்கப்பட்ட செட்டின் செலவு மட்டுமே ரூ 100 கோடியாம். பீரியட் படம் என்பதால் 70களின் கால கட்டத்தில் இருந்தது போல செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. செட்டிற்காகவே பெரும் தொகையை தயாரிப்பாளர் ஒதுக்கி உள்ளார்.

மிரண்டு போன ரசிகர்கள்
செட் அமைக்கும் பணிக்காக கலை இயக்குநர் ரவீந்திர் ரெட்டி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதிக அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன இதனால், கிராபிக்ஸிற்கும் கணிசமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . ராதே ஷ்யாமின் செட்டுக்கான செலவை கேட்டு ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











