ஹாட்ரிக் தோல்வி.. பெரிய படங்கள், பெரிய நடிகர்கள் என நம்பிப் போன பூஜா ஹெக்டே நிலைமை இப்படி ஆகிடுச்சே?

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என முன்னணி நடிகர்கள் படங்களில் ஒப்பந்தம் ஆனதில் ரொம்பவே குஷியாக இருந்தார் பூஜா ஹெக்டே.

ஆனால், இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான 3 படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரிய படங்கள், பெரிய நடிகர்கள் என நம்பி நடித்த பூஜா ஹெக்டே இப்படி ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

புட்டபொம்மா

புட்டபொம்மா

பூஜா ஹெக்டே ஆரம்பத்தில் கோலிவுட்டில் நடித்த முகமூடி திரைப்படம் படு தோல்வியை தழுவிய நிலையில், அதன் பின்னர் கோலிவுட் பக்கமே தலை வைத்து படுக்கவில்லை. டோலிவுட் மற்றும் இந்தியில் அவருக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், அங்கேயே செட்டில் ஆகி இருந்தார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலோ திரைப்படத்தின் மூலம் புட்டபொம்மாவாக இந்தியளவில் பிரபலமானார்.

ராதே ஷ்யாம் தோல்வி

ராதே ஷ்யாம் தோல்வி

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ படம் தான் சரியாக போகவில்லை. ஆனால், 250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராதே ஷ்யாம் படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என நினைத்து அந்த படத்தில் கமிட் ஆனார் பூஜா ஹெக்டே. கிளைமேக்ஸ் காட்சியில் கப்பலில் பிரபாஸ் செய்த அப்படியொரு சாகசத்தை பார்த்த ரசிகர்கள், போதும்டா சாமி என தியேட்டர் பக்கமே ஒதுங்காமல் போன நிலையில், படம் படுத்தே விட்டது.

விஜய் படமும் சொதப்பல்

விஜய் படமும் சொதப்பல்

முகமூடி படத்திற்கு பிறகு மீண்டும் கோலிவுட் என்ட்ரி, இந்த முறை விஜய் படம் என்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய கம்பேக் கிடைக்கும் என பல கனவுகளோடு காத்திருந்த பூஜா ஹெக்டேவுக்கு அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடலில் நடனமாடியது மட்டும் தான் ஆறுதலே.. அபர்ணா தாஸுக்கு கொடுக்கப்பட்ட வெயிட்டேஜ் கூட பூஜா ஹெக்டேவுக்கு கொடுக்கவில்லை. படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஹைதராபாத் ஜாவோங்கே என ஆச்சார்யா படத்தின் மீது ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வைத்திருந்தார்.

ஹாட்ரிக் தோல்வி

ஹாட்ரிக் தோல்வி

இந்நிலையில், நேற்று வெளியான ஆச்சார்யா திரைப்படமும் படு தோல்வியை சந்தித்து பூஜா ஹெக்டேவுக்கு ஹாட்ரிக் தோல்வியை பரிசளித்துள்ளது. RRR வெற்றி அப்படியே ஆச்சார்யாவுக்கு பயன் தரும் என எதிர்பார்த்த நிலையில், படம் நல்லா இருந்தாதான் பாஸ் ஓடும் என மீண்டும் ரசிகர்கள் பாடம் புகட்டி உள்ளனர்.

ஏறிய மார்க்கெட்

ஏறிய மார்க்கெட்

அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் திடீரென உச்சத்திற்கு சென்றது. தொடர்ந்து, பிரபாஸ் உடன் ஒரு படம், ராம்சரண் உடன் ஒரு படம் தமிழில் விஜய் உடன் ஒரு படம் என மூன்று பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. நாமதான் அடுத்த நம்பர் ஒன் ஹீரோயின் என உற்சாகத்தில் துள்ளி குதித்து அனைத்து படங்களுக்கும் ஓகே என ஒப்பந்தம் செய்தார்.

அடுத்து என்ன சம்பவம்

அடுத்து என்ன சம்பவம்

தெலுங்கு படமான F3 படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸாக வருகிறார் பூஜா ஹெக்டே. பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வரும் சர்க்கஸ் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் நடித்துள்ளனர். மீண்டும் தெலுங்கில் இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. பெரிய படங்கள் என்பதை மட்டும் பார்க்காமல் கதை எந்தளவுக்கு வெயிட்டா இருக்கு என்பதை காது கொடுத்து கேட்டால் வெற்றியை ருசிக்கலாம் பூஜா ஹெக்டே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X