Don't Miss!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்போதும் தவறான முடிவெடுத்துத்துட்டு உட்கார்ந்து அழுவாங்களாம்... உங்க ராசி என்ன?
- Sports
செஸ்- பிரக்ஞானந்தாவை பாராட்டிய உலகின் 2ஆம் நிலை வீரர்.. இறுதிப் போட்டியில் தோற்றாலும் சாதனை
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Technology
டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்‘ ரிலீஸ் தேதி அறிவிப்பு… குஷியில் ரசிகர்கள் !
சென்னை : தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ளார்.
டேனியல்
கிரெய்க்
நடித்த
பாண்ட்
படங்களிலேயே
இதுதான்
பெஸ்ட்..
No
Time
To
Die
எப்படி
இருக்கு?
காதலை மையமாக வைத்து உருவாகும் படமான ராதே ஷ்யாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார்.

பாகுபலி
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகம் ஆனவர் நடிகர் பிரபாஸ் அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய பெரிய படங்களில் கமிட்டானார் பிரபாஸ். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு வெளியான சாஹோ படமும் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது.

ராதே ஷ்யாம்
பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாமும் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்

பொங்களுக்கு ரிலீஸ்
1970-களில் ஐரோப்பில் நடக்கும் காதல் கதையாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த வருடம் ஜூலை 30 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோன காரணமாக வெளியாகவில்லை. தற்போது கொரோனா தாக்கம் மெல்ல குறைந்து வரும் நிலையில் அடுத்த வருடம் இத்திரைப்படம் 2022 ஜனவரி 14ந் தேதி பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.

ஆதிபுருஷ் 5 மொழியில்
பிரபாஸ், ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கி வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில், சயீப் அலிகான், கீர்த்தி சனோன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் வேகமாக நடைபெற்று வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் தமிழ், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ந் தேதி வெளியாக உள்ளது.

சலார்
சலார் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார் இப்படத்தை கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் பேனரில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகிறது.