வெளிநாட்டு லொகேஷனில், ஓடும் ரயிலில்.. 'ராதே ஷ்யாம்' படத்தில் இதுதான் பூஜா ஹெக்டே லுக்!
சென்னை: பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை முன்னிட்டு, ராதே ஷ்யாம் படக்குழுவினர் அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பிரபாஸ் இப்போது நடித்து வரும் படம், ராதே ஷ்யாம். இதை கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார்.
தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாள மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

ஐரோப்பிய பின்னணி
பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது. இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது. பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே இதன் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. இஸ்ரேலில் இதன் ஷூட்டிங் நடக்க இருக்கிறது.

ரசிகர்களின் செல்லம்
இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். இவர், தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர். பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கில் கவனம் செலுத்திய பூஜா ஹெக்டே, சில ஹிட் படங்களில் நடித்துள்ளார். அங்கு ரசிகர்களின் செல்லமாக, முன்னணி நடிகையாக வருகிறார்.

மாடர்ன் பெண்
ராதே ஸ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே, 2 கேரக்டர்களில் நடிப்பதாகவும் ஒரு கேரக்டரில் கிராமத்து பெண்ணாகவும் மற்றொரு கேரக்டரில் மாடர்ன் பெண்ணாகவும் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் இல்லை. அவர் இசை ஆசிரியராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை பூஜாவுக்கு இன்று பிறந்த நாள்.

வெளிநாட்டு லொகேஷன்
இதையடுத்து ராதே ஷ்யாம் படத்தில் இடம்பெறும் அவர் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அவர் கேரக்டர் பெயர் பிரேரனா ( Prerana) என்பதையும் படக்குழு தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில், வெளிநாட்டு லொகேஷனில், ஓடும் ரயிலில் அவர் அமர்ந்திருக்கிறார். எதிரில் பிரபாஸ் அமர்ந்திருப்பது போல தெரிகிறது. இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











