செம ரொமான்ஸ்.. பிரபாஸுக்காக 'ராதே ஷ்யாம்' டீம் வெளியிட்ட அசத்தல் மோஷன் வீடியோ!
சென்னை: நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ராதே ஷ்யாம் படத்தின் மோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ், இப்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.கே. ராதாகிருஷ்ணா இதை இயக்குகிறார்.
பூஜா ஹெக்டே ஹீரோயின். பீரியட் காதல் கதையான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கிறது.

இரண்டு கேரக்டர்
இதன் ஷூட்டிங், கொரோனாவுக்கு முன்புவரை ஜார்ஜியாவில் நடந்து வந்தது. ஐரோப்பாவில் நடைபெறும் காதல் காவியமாக இந்தப் படம் உருவாகிறது. படத்தில், பூஜாவுக்கு இரண்டு கேரக்டர் என்று கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே, தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர். பிறகு தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை.

மோஷன் வீடியோ
தெலுங்கில் கவனம் செலுத்திய பூஜா ஹெக்டே, இந்தியிலும் நடித்து வருகிறார். ராதே ஷ்யாம் படத்தில், பூஜா, பிரபாஸ் கேரக்டர்கள் இந்த மாதத் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. இந்நிலையில், இன்று பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் படக்குழு மோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது.
View this post on InstagramA post shared by Pooja Hegde (@hegdepooja) on
மிரட்டும் விஷுவல்
அழகான காட்டுக்குள் செல்லும் ரயிலில் பூஜாவும் பிரபாஸும் ரொமான்ஸ் லுக்கில் நிற்கும் காட்சி இதில் இடம்பெற்றுள்ளது. பிரபாஸுக்கும் அவர் ரசிகர்களுக்கும் இது சரியான பரிசு என்றும் விஷுவல் மிரட்டுவதாகவும் கூறுகின்றனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

5 மொழிகளில்
இந்தப் படத்தில், சச்சின் கேடேகர், பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேத்ரி, குனால் ராய் நடித்துள்ளனர். இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படுகிறது. வம்சி மற்றும் பிரமோத், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











