“ராதே ஷ்யாம்“ ஜோசியம் பலிக்கவில்லை… 50 கோடியை திருப்பி கொடுத்த பிரபாஸ் !
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராதே ஷ்யாம் திரைப்படம் ரூ 100 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

பிரபாஸ்
தெலுங்கு நடிகர் பிரபாஸ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்தார். இப்படம் இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இரண்டாம் பாகமும் வெற்றி வாகை சூடியது.

நஷ்டம்
சாஹோ திரைப்படத்திற்கு பின் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த 11ந் தேதி ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக வெளியான, இத்திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர். காலத்தையும் காதலையும் ஒன்றாக இணைக்கும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பான கதை களம்
ராதே ஷ்யாமில் காலத்தை கைரேகை நிபுணராக நடித்துள்ள பிரபாஸ், எதிர்காலத்தை கணித்து சொல்லுகிறார். இப்படத்தின் கதைக்களம் சிறப்பாக இருந்த போதும், படம் ஆமை வேகத்தில் நகர்ந்தது தான் இப்படத்தின் தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது. படத்தை விறுவிறுப்பாக்கி சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

50 கோடி திருப்பி கொடுத்தார்
பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் 138 கோடியை வசூலிக்க வேண்டுமாம். ஆனால் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகி உள்ள நிலையில் வெறும் 75 மட்டுமே வசூலாகி உள்ளதால், கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் நஷ்டமடைந்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இதனால், இப்படத்தில் நடித்ததற்காக 100 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியிருந்த பிரபாஸ், 50 கோடி ரூபாயை தயாரிப்பாளரிடம் திருப்பி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராதே ஷ்யாம் திரைப்படத்தில் பிரபாஸின் ஜோஸியம் பலிக்கவில்லை என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











