ராதே ஷ்யாம் படத்தின் ரொமான்டிக் பாடல்... ஒரே நாளில் 15 மில்லியன் பார்வைகள்!
ஹைதராபாத் : நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம்.
இந்தப் படம் பொங்கலை ஒட்டி அடுத்த ஆண்டில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் ரொமான்டிக் பாடல் ஒன்று வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ராதே ஷ்யாம் படம்
நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். இந்த படத்திற்கு சிறப்பான வரவேற்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

350 கோடி ரூபாய் பட்ஜெட்
மிகுந்த பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்கியுள்ளார் ராதா கிருஷ்ணகுமார். இந்த படம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசை
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ரொமாண்டிக் பாடல் ஒன்று தற்போது ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது. வெளியிடப்பட்ட 24 மணிநேரத்தில் இந்த பாடல் தற்போது 15 மில்லியன் வியூஸ்களை எட்டியுள்ளது.

பூஜா ஹெக்டே மகிழ்ச்சி
முன்னதாக இதயத்தை தொட்ட பாடல் என்று தெரிவித்திருந்த பூஜா ஹெக்டே, தற்போது இந்த பாடல் 15 மில்லியன் வியூஸ்களை எட்டியுள்ளது குறித்தும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.

மிரட்டல் டீசர் வெளியீடு
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி பிரபாஸின் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்த படத்தில் விக்ரமாதித்யா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளது குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது. இந்த டீசர் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது.


Click it and Unblock the Notifications











