பீஸ்ட் பட நடிகைக்கு பிரபாஸ் படக்குழு கொடுத்த பிறந்த நாள் கிஃப்ட்ட பாருங்க!
சென்னை: பீஸ்ட் பட நடிகையான பூஜா ஹெக்டேவுக்கு பிரபாஸ் படக் குழுவினர் பிறந்தநாள் பரிசளித்துள்ளனர்.
முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
அல்லு அர்ஜூனுடன் வைகுந்தபுரமுலு படத்தில் நடித்தார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

பீஸ்ட் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி
வைகுந்தபுரமுலு படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் பூஜா ஹெக்டேவுக்கு வாய்ப்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் விஜய்யின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் பூஜா ஹெக்டே.

ரூ.350 கோடி பட்ஜெட்
இந்நிலையில் நடிகை பூஜே ஹெக்டே தெலுங்கில் பிரபாசுடன் இணைந்து 'ராதே ஷ்யாம்' என்னும் படத்தில் நடித்துள்ளார். 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

பிறந்த நாளில் ஸ்பெஷல் கிஃப்ட்
ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ராதே ஷ்யாம் படக்குழுவினர் அவருக்கு ஸ்பெஷல் கிஃப்ட் அளித்துள்ளனர்.

வெள்ளை உடையில் ஏஞ்சல் போல்
அதாவது 'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இதில் வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போன்று உள்ளார் பூஜா ஹெக்டே. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











